செய்திகள்,திரையுலகம் அஜித் பிறந்த நாளில் வெளியாகும் ‘அஞ்சான்’ டிரைலர்!…

அஜித் பிறந்த நாளில் வெளியாகும் ‘அஞ்சான்’ டிரைலர்!…

அஜித் பிறந்த நாளில் வெளியாகும் ‘அஞ்சான்’ டிரைலர்!… post thumbnail image
சென்னை:-சூர்யா இரட்டை வேடத்தில் நடிக்கும் ‘அஞ்சான்‘ படத்தை லிங்குசாமி இயக்கி வருகிறார். சமந்தா ஹீரோயின். இதன் ஷூட்டிங் பெரும்பகுதி முடிந்துவிட்டது.வரும் ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ள இப்படத்தின் டிரைலரை அஜீத் பிறந்த நாளான மே 1ம் தேதியன்று வெளியாகிறது.

சூர்யா பட டிரைலரை அஜித் பிறந்தநாளில் வெளியிடுவது ஏன். என்பதற்கு பட குழுவினரிடமிருந்து சரியான பதில் வராதபோதிலும் அன்றையதினம் டிரைலர் ரிலீஸ் செய்ய உள்ளது உண்மைதான் என தயாரிப்பாளர் யுடிவி தனஞ்செயன் கூறி இருக்கிறார். இது பற்றி அவர் கூறும்போது,

அஞ்சான் பட குழு படத்தின் முதல் டிரைலரை மே 1ம் தேதி வெளியிடுவதற்கு கடினமாக உழைத்து வருகின்றனர். இதுவரை பார்த்திராத அசத்தும் தோற்றத்துடனும், ஸ்டைலான நடிப்பிலும் சூர்யாவை அனைவரும் பார்க்கப்போகிறீர்கள் என்றார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி