செய்திகள்,திரையுலகம் நடிகை ஹன்சிகாவின் இடுப்பை கிள்ளிய ரசிகர்!…

நடிகை ஹன்சிகாவின் இடுப்பை கிள்ளிய ரசிகர்!…

நடிகை ஹன்சிகாவின் இடுப்பை கிள்ளிய ரசிகர்!… post thumbnail image
சென்னை:-நடிகை ஜெயப்பிரதாவின் மகன் சித்துவுக்கு ஜோடியாக ஹன்சிகா நடிக்கும் ‘உயிரின் உயிரே’ படப்பிடிப்பு சில நாட்களுக்கு முன்பு கோவாவில் நடைபெற்றுள்ளது. அப்போது சித்து,ஹன்சிகா சம்பந்தப்பட்ட கிளுகிளுப்பாக காட்சிகளை கோவா கடற்கரையில் படமாக்கியிருக்கிறார்கள். இருவரும் கடற்கரை மணலிலும், கடல் நீருக்குள்ளும் விழுந்து புரண்டு காதல் உணர்ச்சிகளை வெளிப்படுத்தியபடி ஆடிப்பாடியிருக்கிறார்கள்.

இவர்கள் கட்டிப்புரண்டு ஆடிய அந்த ரொமாண்டிக் நடிப்பு அவர்களை சுற்றி நின்று வேடிக்கைப்பார்த்த சில ரசிகர்களை உசுப்பேற்றி விட்டதாம். விளைவு, மதிய இடைவேளைக்காக ஹன்சிகா கேரவனை நெருங்கும்போது சில ரசிகர்கள் அவரிடம் ஆட்டோகிராப் வேண்டும் என்று முட்டி மோதினார்களாம். அதையடுதது, ஆட்டோகிராப் கொடுத்து விட்டால் அவர்களின் பிரச்னை தீர்ந்து விடும் என்று அவர்களை நெருங்கியிருக்கிறார் ஹன்சிகா.

அதையடுத்து ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் ஒரு பெரும் கும்பலே அவர் மீது பாய்ந்து விட்டார்களாம். இதனால் அவர்களுக்கிடையே சிக்கிக்கொண்ட ஹன்சிகாவை, யாரோ ரசிகர் அந்த கூட்ட கலவரத்தை பயன்படுத்தி ஹன்சிகாவின் இடுப்பை பிடித்து கிள்ளி விட்டாராம். இதனால் வலி தாங்க முடியாமல் ஹன்சிகா அலற, யூனிட் நபர்கள் ஓடிவந்து அவரை மீட்டுள்ளனர். அந்த ரசிகரின் செயல் வெறித்தனமாக இருந்ததால், அதன்பிறகு தன்னால் நடிக்க முடியாது என்று கேரவனுக்குள் சென்று சுருண்டு கொண்டாராம் ஹன்சிகா.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி