செய்திகள் குழந்தைக்கு சிகரெட் பிடிக்க கற்று கொடுத்த தந்தை!…

குழந்தைக்கு சிகரெட் பிடிக்க கற்று கொடுத்த தந்தை!…

குழந்தைக்கு சிகரெட் பிடிக்க கற்று கொடுத்த தந்தை!… post thumbnail image
மாஸ்கோ:-ரஷ்யாவில் தனது குழந்தைக்கு தந்தையே சிகரெட் பிடிக்க கற்று தந்து இருக்கிறார். அதுவும் இக்காட்சி வீடியோ படமாக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.அந்த வீடியோவில் ரஷ்யாவை சேர்ந்த தந்தை ஒருவர் தவழும் தனது ஆண் குழந்தையுடன் இருக்கிறார்.

அப்போது அவர் சிகரெட் பிடிக்கிறார். அது என்ன என்று அறியாத பச்சிளம் பிஞ்சு குழந்தை அதை அவரிடம் இருந்து பிடுங்க முயல்கிறது.உடனே அவர் தனது வாயில் வைத்திருந்த சிகரெட்டை எடுத்து குழந்தையின் வாயில் வைத்து புகைக்க கற்றுக் கொடுக்கிறார். அதை ஏதும் அறியாத குழந்தையும் திருப்பி செய்கிறது.இந்த ஆபத்தான வீடியோ காட்சி ரஷ்யாவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி