செய்திகள்,தொழில்நுட்பம் மாயமான மலேசிய விமானத்தில் பயணம் செய்த அனைவருக்கும் மரண சர்டிபிகேட் மலேசிய அரசு வழங்கியது!…

மாயமான மலேசிய விமானத்தில் பயணம் செய்த அனைவருக்கும் மரண சர்டிபிகேட் மலேசிய அரசு வழங்கியது!…

மாயமான மலேசிய விமானத்தில் பயணம் செய்த அனைவருக்கும் மரண சர்டிபிகேட் மலேசிய அரசு வழங்கியது!… post thumbnail image
கோலாலம்பூர்:-மலேசியாவின் தலைநகரான கோலாலம்பூரில் இருந்து, சீனாவின் தலைநகரான பீஜிங்கிற்கு 239 பேருடன் புறப்பட்டு சென்ற விமானம் கடந்த 8ம் தேதி நடுவானில் மாயமானது. அதன் கதி என்ன என்பது குறித்து இதுவரை உறுதியான தகவல் ஏதுமில்லை.

சீனக்கடலுக்கு மேலே சுமார் 36 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த போது, வியட்நாம் அருகே தோ சூ தீவுக்கு 250 கி.மீ. தொலைவில் கடலில் விழுந்து நொறுங்கியதாக முதல் கட்ட தகவல் வெளியானது முதல், இதுவரை பல்வேறு முரண்பட்ட தகவல்களே வந்து கொண்டிருக்கின்றன.இதுவரை எட்டு நாடுகளின் மீட்பு படைகள் இரவு பகலாக கடலின் அனைத்து பகுதிகளிலும் தேடியும் எவ்வித தகவலும் கிடைக்காததால், விமானத்தை தேடும் பணியை நிறுத்தப்போவதாக மீட்புப்படையினர் தெரிவித்துள்ளனர்.
மலேசிய அரசு ஏற்கனவே அந்த விமானத்தில் பயணம் செய்த 239 பயணிகளும் மரணம் அடைந்ததாக அறிவித்திருந்தது.

இந்நிலையில் பயணிகளின் உறவினர்களுக்கு நேற்று மலேசிய அரசு விமானப்பயணிகளின் மரண சர்டிபிகேட்டுக்களை வழங்கியது. இதன்மூலம் பயணிகள் அனைவரும் இறந்ததாக சட்டபூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது.மேலும் பயணிகளின் உறவினர்கள் விமான நிர்வாகத்தின் மீது வழக்கு தொடரவும் மலேசிய அரசு அனுமதி கொடுத்துள்ளது.விமானத்தின் கருப்புப்பெட்டியின் பேட்டரி செயல் இழக்கும் காலம் ஆகிவிட்டதாலும், கடல்பகுதியில் தற்போது வானிலை மிகவும் மோசமாக இருப்பதாலும், தேடும் பணி நிறுத்தப்படுவதாக மீட்பு படையினர் கூறியுள்ளனர். மேலும் இதுவரை கடல்பகுதியை அலசிவிட்டதாகவும், இந்திய பெருங்கடலில் 4000 அடி ஆழம் வரையிலும், சுமார் 50,000 சதுர கி.மீ பரப்பளவில் தேடுதல் பணியை முடித்துவிட்டதாகவும் கூறிய மீட்புப்படையினர்கள், தேடுதல் வேட்டையில் தோல்வி அடைந்துவிட்டதாக கூறினர்.

மேலும் விமானம் கடலில் விழுந்ததா? என்பதே உறுதியாக தெரியாத நிலையில் இனிமேலும் கடலில் தேடிக்கொண்டிருப்பதில் எவ்வித பயனும் இருக்கபோவதில்லை என்று தாங்கள் முடிவெடுத்து இருப்பதாகவும், அவர்கள் தெரிவித்தனர். மலேசிய அரசும் தேடுதல் பணியை நிறுத்த ஒப்புக்கொண்டதாகவும் தெரிகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி