செய்திகள்,திரையுலகம் மோடிக்கு ‘கோச்சடையான்’ சிறப்புக் காட்சி?…

மோடிக்கு ‘கோச்சடையான்’ சிறப்புக் காட்சி?…

மோடிக்கு ‘கோச்சடையான்’ சிறப்புக் காட்சி?… post thumbnail image
சென்னை:-செளந்தர்யா இயக்கத்தில், ரஜினி நடிப்பில் மோஷன் கேப்சர் தொழில்நுட்பத்தில் உருவாகியிருக்கும் படம் ‘கோச்சடையான்’. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து இருக்கும் இப்படத்தினை மீடியா ஒன் நிறுவனம் தயாரித்திருக்கிறது. ஈராஸ் நிறுவனம் மே 9ம் தேதி வெளியிட இருக்கிறது.

‘கோச்சடையான்’ படத்தினை, பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடிக்கு தனியாக திரையிட்டு காட்ட ரஜினி முடிவு செய்திருக்கிறார் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் உறுதி செய்தன.சென்னை பிரச்சாரத்திற்கு வந்திருந்த நரேந்திர மோடி, தனது நண்பரான ரஜினிகாந்த்தை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார்.இந்நிலையில் ‘கோச்சடையான்’ படத்தினைப் பார்க்க மோடி விரும்பியதாகவும், அதற்கு ரஜினி சம்மதம் தெரிவித்து இருக்கிறாராம். இதற்கான பணிகளை முடக்கி விட்டுள்ளாராம் ரஜினி.

குஜராத்தில் மோடியின் இடத்தில் நடைபெற இருக்கும் திரையிடலில், ரஜினி கலந்து கொள்ளாமல் இயக்குநர் மற்றும் மகள் செளந்தர்யா ரஜினிகாந்த் மட்டும் கலந்து கொள்ள இருக்கிறார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி