செய்திகள்,விளையாட்டு ஐ.பி.எல்: சென்னையை வீழ்த்தியது பஞ்சாப்!…

ஐ.பி.எல்: சென்னையை வீழ்த்தியது பஞ்சாப்!…

ஐ.பி.எல்: சென்னையை வீழ்த்தியது பஞ்சாப்!… post thumbnail image
அபுதாபி:-ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று அபுதாபியில் நடைபெற்ற 3-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் – கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் விளையாடின. டாஸ் வென்று முதலில் ஆடிய சென்னை அணியின் தொடக்க வீரர்கள் ஸ்மித், மெக்கல்லம் ஆகியோர் அதிரடியாக ஆடி அரை சதம் கடந்தனர்.

ஸ்கோர் 123ஐ தொட்டபோது மெக்கல்லம் 67 ரன்களில் ஆட்டமிழந்தார். அவர் 45 பந்துகளில் 4 பவுண்டரி, 5 சிக்சருடன் இந்த இலக்கை எட்டினார். இதேபோல், அபாரமாக ஆடிய மற்றொரு தொடக்க வீரர் ஸ்மித், 43 பந்துகளில் 6 பவுண்டரி 3 சிக்சருடன் 66 ரன்கள் சேர்த்து விக்கெட்டை இழந்தார். அவர்களைத் தொடர்ந்து ரெய்னா 24 ரன்களிலும், கேப்டன் டோனி 26 ரன்களிலும் (11 பந்து, 3 பவுண்டரி, ஒரு சிக்சர்) அவுட் ஆக, சென்னை அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 205 ரன்கள் குவித்தது.
பஞ்சாப் அணி தரப்பில் பாலாஜி 2 விக்கெட்டுகளும், பட்டேல், அவானா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர். இதையடுத்து 206 ரன்கள் என்ற கடின இலக்கை எதிர்த்து களமிறங்கிய பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷேவாக் அதிரடியில் ஈடுபட்டார்.

10 பந்துகளில் 4 பவுண்டரிகள் விளாசிய அவர் 19 ரன்னில் அவுட்டானார். அவரை தொடர்ந்து புஜாரா 13 ரன்னில் அவுட்டானார். பின்னர் களமிறங்கிய மேக்ஸ்வெல்லும் டேவிட் மில்லரும் அதிரடி ஆட்டத்தில் இறங்கினர். இதனால் பஞ்சாப் அணியின் ரன்வேகம் அதிகரித்தது.அதிரடி காட்டிய மேக்ஸ்வெல் 43 பந்துகளில் 15 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்சருடன் 95 ரன்கள் குவித்து அவுட்டானார். பின்னர் டேவிட் மில்லர் அடுத்தடுத்து சிக்சர்கள் விளாசி 30 பந்துகளில் 50 ரன்கள் குவித்தார்.இவருடன் ஜோடி சேர்ந்த கேப்டன் ஜார்ஜ் பெய்லி பதற்றமின்றி விளையாடி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றார். இறுதியில் 18.5 ஓவர்களில் பஞ்சாப் அணி 206 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

CHE – Inning

Batsman R B M 4s 6s S/R
Smith D. R. c Bailey G. b Balaji L. 66 43 76 6 3 153.49
McCullum B. c Maxwell G. b Patel A. 67 45 55 4 5 148.89
Raina S. c Sehwag V. b Awana P. 24 19 33 2 0 126.32
Dhoni M. c Dhawan R. b Balaji L. 26 11 19 3 1 236.36
Bravo Dw. not out 8 3 7 0 1 266.67
Extras: (w 11, nb 1, lb 2) 14
Total: (20 overs) 205 (10.3 runs per over)
Bowler O M R W E/R
Patel A. 3.6 0 34 1 9.44
Awana P. 2.6 0 35 1 13.46
Johnson M. 3.6 0 48 0 13.33
Balaji L. 3.6 0 44 2 12.22
Dhawan R. 2.6 0 21 0 8.08
Maxwell G. 1.6 0 23 0 14.38

KIN – Inning

Batsman R B M 4s 6s S/R
Patel A. lbw Ashwin R. 2 3 8 0 0 66.67
Maxwell G. b Smith D. R. 95 43 61 15 2 220.93
Pujara C. lbw Ashwin R. 13 10 17 2 0 130.00
Sehwag V. b Nehra A. 19 10 12 4 0 190.00
Miller D. A. not out 54 37 63 3 3 145.95
Bailey G. not out 17 10 15 2 0 170.00
Extras: (w 5, lb 1) 6
Total: (18.5 overs) 206 (10.9 runs per over)
Bowler O M R W E/R
Smith D. R. 1.6 0 25 1 15.63
Nehra A. 2.6 0 24 1 9.23
Sharma M. 2.5 0 35 0 14.00
Ashwin R. 3.6 0 41 2 11.39
Negi P. 2.6 0 37 0 14.23
Jadeja R. 3.6 0 43 0 11.94

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி