செய்திகள்,திரையுலகம் அஜித்தின் அடுத்த படத்தின் பெயர் ‘ஆயிரம் தோட்டாக்கள்’?…

அஜித்தின் அடுத்த படத்தின் பெயர் ‘ஆயிரம் தோட்டாக்கள்’?…

அஜித்தின் அடுத்த படத்தின் பெயர் ‘ஆயிரம் தோட்டாக்கள்’?… post thumbnail image
சென்னை:-கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கிய நிலையில் தற்போது ஈ.சி.ஆர் ரோட்டில் உள்ள விஜிபி கோல்டன் பீசில் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறதாம்.இந்நிலையில் இந்த படத்தின் பெயரை பற்றி ஒரு தகவல் வந்துள்ளது.

இப்படத்திற்கு ‘ஆயிரம் தோட்டாக்கள்’ என்று பெயர் வைத்திருக்கின்றனராம். ஆனால் இன்னும் அதிகாரப் பூர்வமான தகவல் வெளிவரவில்லை.இப்படத்தில் அர்ஜீன் என்ற இந்திய மாடல் நடிக்க இருக்கிறாராம்.இதை பற்றி தனது டிவிட்டர் பக்கத்தில் அர்ஜீன்,அஜீத்துடன் நடிப்பது நல்ல அனுபவமாக இருந்தது என்று குறிப்பிட்டுள்ளார்.

அஜித் இரண்டு வேடங்களில் நடிக்க இருக்கிறார் என்பதால் வெளிநாட்டிலிருந்து அதிநவீன கேமராவையும் கொண்டு படம் எடுக்கின்றனர்.இந்த படத்திற்கு ஒளிப்பதிவாளராக டேன் மேகர்தர் மற்றும் தாமரை வசனங்களை எழுத, ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி