செய்திகள் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் அத்தை மரணம்!…

அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் அத்தை மரணம்!…

அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் அத்தை மரணம்!… post thumbnail image
பாஸ்டன்:-அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் அத்தை ஜெய்துனி ஆன்யாங்கோ (வயது 61). கென்யாவை சேர்ந்த இவர், ஒபாமா தந்தையின் ஒன்றுவிட்ட தங்கை.அமெரிக்காவில் பாஸ்டன் நகரில் வசித்து வந்த ஜெய்துனி, சில காலமாக உடல்நலக்குறைவால் தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் நேற்று இரவு, அவர் சிகிச்சை பலனின்றி தூக்கத்திலேயே மரணம் அடைந்தார்.இவர் அமெரிக்காவில் பல காலம் சட்டவிரோதமாக வசித்து க்ரீன் கார்டு பெற்று நிரந்தர குடியுரிமை நபராக வாழ்ந்து வந்தவர். இவர் கென்யாவில் மேங்கோ ட்ரீ என்ற இடத்தில் பிறந்து வளர்ந்து, அதன்பின்னர் கம்ப்யூட்டர் பணிபுரிய அமெரிக்கா வந்தவர். ஒபாமா அதிபராக தேர்ந்தெடுக்கும் முன்னரே இவர் அமெரிக்காவில் குடியேறியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி