செய்திகள்,திரையுலகம் ‘நான் சிகப்பு மனிதன்’ படத்திற்கு ‘யூ/ஏ’ சான்றிதழ்!…

‘நான் சிகப்பு மனிதன்’ படத்திற்கு ‘யூ/ஏ’ சான்றிதழ்!…

‘நான் சிகப்பு மனிதன்’ படத்திற்கு ‘யூ/ஏ’ சான்றிதழ்!… post thumbnail image
சென்னை:-திரு இயக்கத்தில் விஷால், லட்சுமி மேனன் நடித்திருக்கும் படம் ‘நான் சிகப்பு மனிதன்’. இப்படம் சமீபத்தில் தணிக்கைக் குழுவிற்கு காண்பிக்கப்பட்டது.படத்தில் சர்ச்சைக்குறிய வகையில் ஒரு முத்தக்காட்சி உள்ளது.

அதை நீக்கினால் மட்டுமே ‘யூ’ சான்றிதழ் வழங்கப்படும் இல்லை எனில் ‘யூ/ஏ’ சான்றிதழையே வழங்குவோம் எனக் கூறியது தணிக்கைக் குழு.படத்தில் இடம்பெறும் அந்த முத்தக்காட்சி கதைக்கு மிக முக்கியமானது என்பதால், மிகவும் குழம்பிப்போனது படக்குழு.

இந்நிலையில், தணிக்கைக்குழு அளித்த ‘யூ/ஏ’ சான்றிதழை படக்குழு ஏற்றுக்கொண்டது. படம் ஏப்ரல்11ம் தேதி வெளிவருகிறது என யூடிவி தயாரிப்பாளர் தனஞ்செயன் தெரிவித்துள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி