செய்திகள்,திரையுலகம் மே 16ம் தேதிக்கு தள்ளிப்போகும் ‘கோச்சடையான்’ வெளியீடு!…

மே 16ம் தேதிக்கு தள்ளிப்போகும் ‘கோச்சடையான்’ வெளியீடு!…

மே 16ம் தேதிக்கு தள்ளிப்போகும் ‘கோச்சடையான்’ வெளியீடு!… post thumbnail image
சென்னை:-ரஜினிகாந்த் இரட்டை வேடங்களில் நடித்து அவருடைய இளைய மகள் சவுந்தர்யா ரஜினிகாந்த் அஸ்வின் டைரக்டு செய்துள்ள ‘கோச்சடையான்’ படம், கோடை விருந்தாக திரைக்கு வர இருக்கிறது. இந்த படத்தின் கதை–திரைக்கதை–வசனத்தை கே.எஸ்.ரவிகுமார் எழுதியிருக்கிறார்.

ரஜினிகாந்த் ஜோடியாக பிரபல இந்தி நடிகை தீபிகா படுகோன் நடித்து இருக்கிறார். சரத்குமார், ஆதி, நாசர், ஜாக்கி செராப், ஷோபனா ஆகியோரும் படத்தில் நடித்துள்ளனர். கவிஞர்கள் வாலி, வைரமுத்து ஆகிய இருவரும் எழுதிய பாடல்களுக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து இருக்கிறார்.
‘கோச்சடை யான்’ படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது. இதன் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது.‘கோச்சடையான்’ தணிக்கை குழுவுக்கு அனுப்பப்பட்டது. தணிக்கை குழுவினர் படத்தை பார்த்து ‘யு’ சான்றிதழ் அளித்துள்ளனர். இதன் மூலம் அரசின் வரி விலக்குக்கு தகுதி பெற்றுள்ளது.

அடுத்த மாதம் (ஏப்ரல்) படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டனர். ஆனால் பாராளுமன்ற தேர்தல் நடப்பதால் ரிலீஸ் தேதியை தள்ளி வைக்கலாமா என்று யோசிக்கின்றனர். உலகம் முழுவதும் ஆறாயிரத்துக்கும் மேற்பட்ட தியேட்டர்களில் இப்படத்தை வெளியிடுகின்றனர்.தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட மொழி களில் இப்படம் வருகிறது.இப்படத்திற்கு சென்சார் அதிகாரிகள் ‘யு’ சான்றிதழ் அளித்திருந்தாலும், படத்தின் முதல் பிரதியை தயார் செய்ய இயக்குநர் சவுந்தர்யா சீனாவில் சென்றிருக்கிறார். அனைத்து பணிகளும் முடிந்து, முதல் பிரதி முடிந்தவுடன் தான் சென்னை திரும்ப திட்டமிட்டு இருக்கிறாராம்.”‘கோச்சடையான்’ படத்தினை வெளியிடும் ஈராஸ் நிறுவனம், இந்தியில் பல்வேறு படங்களை வெளியிட தீர்மானித்திருக்கிறது.அதுமட்டுமன்றி, தமிழகத்தில் தேர்தல் பணிகள் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில் படத்தினை தற்போது வெளியிட்டால் நன்றாக இருக்காது. தேர்தல் முடிந்து யாருக்கு வெற்றி என்ற அறிவிப்பு மே 16-ம் தேதி வெளியாக இருக்கிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி