செய்திகள்,திரையுலகம் ‘என்னமோ எதோ’ படத்தில் குத்து சண்டை காட்சிக்கு சிறப்பு விருந்தினராக வரும் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர்!…

‘என்னமோ எதோ’ படத்தில் குத்து சண்டை காட்சிக்கு சிறப்பு விருந்தினராக வரும் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர்!…

‘என்னமோ எதோ’ படத்தில் குத்து சண்டை காட்சிக்கு சிறப்பு விருந்தினராக வரும் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர்!… post thumbnail image
சென்னை:-‘என்னமோ எதோ‘ படத்தில் நடிகர் கார்த்திக் மகன் கௌதம் கார்த்திக் நடித்து உள்ளார். இந்த படத்தில் எம்.ஜி.ஆர். ஒரு காட்சியில் மட்டும் குத்துசண்டை போட்டியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்கிறார். இது பற்றி படத்தின் இயக்குநர் கூறியதாவது;

எம்.ஜி.ஆர்-க்கு பிடித்தது குத்துசண்டை போட்டி இதற்கு வடசென்னையில் மிகபெரிய ரசிகர் மன்றமே இருந்துள்ளது.எம்.ஜி.ஆர் பல குத்துசண்டை போட்டிகளில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டுள்ளார்.இந்த படத்தில் குத்துசண்டை காட்சி இடம் பெற்றுள்ளது. 1980 ஆம் ஆண்டு பிரபுவும் முன்னாள் வில்லன் அசோகன் மகன் வின்சென்ட் அசோகன் குத்து சண்டை போட்டியில் சண்டை போடுவது போல படம் எடுக்கபட்டுள்ளது.

இதில் சிறப்பு விருந்தினராக அப்போதைய முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர் கலந்து கொள்வதுபோல் படமாக்கபட்டுள்ளது.பிரபு திரை உலகில் நுழைந்தபோது எம்.ஜி.ஆர் முழுநேர அரசியலுக்கு சென்றார்.பல படங்களில் எம்.ஜி.ஆர் ரசிகராகவே பிரபு நடித்துள்ளார்.இந்த படத்திலும் பிரபு எம்.ஜி.ஆர் ரசிகராகவே நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி