செய்திகள்,திரையுலகம் நான் ஸ்டாப் (2014) திரை விமர்சனம்…

நான் ஸ்டாப் (2014) திரை விமர்சனம்…

நான் ஸ்டாப் (2014) திரை விமர்சனம்… post thumbnail image
150 பயணிகளுடன் லண்டனில் இருந்து புறப்படுகிறது ஒரு தனியார் விமானம். இதில் பயணிகளின் ரகசிய பாதுகாவலராக பயணிகள் போல் நாயகன் நீசன் பயணிக்கிறார். இவருடன் மற்றொரு காவலரும் செல்கிறார். 6 வயது சிறுமி இறந்த துக்கத்தில் பயணம் செல்கிறார் நீசன்.

இந்நிலையில் நீசனின் செல்போனுக்கு ஒரு மெசேஜ் வருகிறது. இதில் விமானம் நல்லபடியாக போய் சேர வேண்டுமானால் என்னுடைய அக்கவுண்ட் நம்பருக்கு 150 மில்லியன் டாலர் பணத்தை செலுத்த வேண்டும், இல்லையெனில் 20 நிமிடத்திற்கு ஒருமுறை ஒவ்வொருவராக இறப்பார்கள் என்று வருகிறது. இதைக்கண்டு அவர் அதிர்ச்சி அடைகிறார்.இந்த மெசேஜை யார் அனுப்பியது என்று அறிய அந்த நம்பருக்கு பதில் மெசேஜ் அனுப்புகிறார். சிறிது நேரம் இப்படியே உரையாடல் நடக்கிறது. நீசன் பதட்டமாக இருப்பதைக் கண்டு, இவருடன் வந்த மற்றொரு காவலர் விசாரிக்க, நீசன் அவர் மீது தவறாக சந்தேகப்பட்டு விசாரிக்கிறார். இதில் இவர்களுக்குள் சண்டை ஏற்பட்டு, அந்த காவலரை கொன்று விடுகிறார் நீசன்.

அதன்பிறகும் நீசன் செல்போனுக்கு மெசேஜ் வருகிறது. விமானத்தில் பயணிக்கும் ஒருவர் தான் தனக்கு மெசேஜ் அனுப்புகிறார் என்று அறிந்து கொண்டு விமானத்தில் அவரை தேடுகிறார். இதற்கிடையில் அடுத்த 20 நிமிடத்தில் விமானி மர்மமான முறையில் இறந்து விடுகிறார். தன் நம்பருக்கு மெசேஜ் அனுப்பும் செல்போனை ஒரு பயணிடம் இருந்து கண்டு பிடிக்கிறார். பிறகு அந்த பயணியும் இறந்துவிடுகிறார்.இறுதியில் விமானத்தில் நடக்கும் மர்மத்தை கண்டுபிடித்தாரா? பயணிகளை காப்பாற்றினாரா? என்பதே மீதிக்கதை.

நாயகன் நீசன், தன்னுடைய அருமையான நடிப்பால் காட்சிகளுக்கு மிளிருட்டுகிறார். குறிப்பாக மெசேஜை கண்டு பதட்டம் அடையும் காட்சிகள் அருமை. படத்தின் ஒளிப்பதிவும், பின்னணி இசையும் கூடுதல் பலம். விமானத்தில் நடக்கும் சண்டைக்காட்சிகள் அதை எடுத்த விதம் சபாஷ் போட வைக்கிறது. விமானத்தில் நடக்கும் கதையை உருவாக்கிய இயக்குனரை பாராட்டலாம்.

மொத்தத்தில் ‘நான் ஸ்டாப்’ ஆக்‌ஷன் விருந்து……

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி