அரசியல்,செய்திகள்,திரையுலகம் சொகுசு பங்களாவில் வி.ஐ.பிக்களுடன் டிஸ்கஷனில் இருக்கும் நடிகை!…

சொகுசு பங்களாவில் வி.ஐ.பிக்களுடன் டிஸ்கஷனில் இருக்கும் நடிகை!…

சொகுசு பங்களாவில் வி.ஐ.பிக்களுடன் டிஸ்கஷனில் இருக்கும் நடிகை!… post thumbnail image
மும்பை:-பாட்ஷா, காதலன், சிட்டிசன், வில்லாதி வில்லன், போன்ற பல படங்களில் நடித்த நடிகை நக்மா தீவிர அரசியலில் கடந்த சில வருடங்களாக இருந்து வருகிறார் என்பது அனைவரும் அறிந்ததே. காங்கிரஸ் கட்சியின் மூலம் தனது சேவையை செய்து வரும் நக்மா, வருகிற பாராளுமன்ற தேர்தலில் நிற்க வாய்ப்பு கேட்டிருந்தார். நேற்று வெளியிட்டிருந்த காங்கிரஸ் கட்சியின் பட்டியலில் நக்மாவுக்கு மீரட் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.

நக்மா காங்கிரஸ் தலைமையிடம் ராஞ்சி தொகுதியைத்தான் கேட்டிருந்தார். ராஞ்சி தொகுதியில் தொடர்ச்சியாக காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளபடியால் மிக எளிதாக வெற்றி பெற்றுவிடலாம் என்று அந்த தொகுதியை குறிவைத்திருந்தார். ஆனால் காங்கிரஸ் தலைமை அவருக்கு மீரட் தொகுதியை அளித்துள்ளது.மீரட் தொகுதியில் காங்கிரஸ் வெற்றி பெற வாய்ப்பு குறைவாக இருந்த போதிலும் நக்மா தனது அதிரடி பிரச்சாரத்தின் மூலம் தொகுதியை கைப்பற்றிவிடுவார் என்று உள்ளூர் காங்கிரஸ் தலைவர்கள் நம்பிக்கையுடன் இருக்கின்றார்கள்.

நக்மா பிரச்சார வேலையை இப்பொழுதே ஆரம்பித்துவிட்டாரம். மீரட் நகரில் ஒரு சொகுசு பங்களாவை வாடகைக்கு எடுத்துள்ளாராம். அந்த பங்களாவிற்கு நகரத்தில் உள்ள முக்கிய வி.ஐ.பிக்களை அழைத்து தேர்தலில் வெற்றி பெறும் வியூகங்கள் குறித்து டிஸ்கஸ் செய்கிறாராம். அவருடன் டிஸ்கஸ் செய்ய தினந்தோறும் முக்கிய வி.ஐ.பிக்கள் அவருடைய பங்களாவை நோக்கி படையெடுத்தவண்ணம் இருக்கின்றார்கள். இந்த டிஸ்கஷன் எந்த அளவுக்கு பயன் கொடுக்கும் என்பதை தேர்தல் முடிவின்போதுதான் தெரியும்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி