செய்திகள்,திரையுலகம் குளியல் காட்சியில் நெருங்கிய ஹீரோவை எட்டி உதைத்த ஹீரோயின்!…

குளியல் காட்சியில் நெருங்கிய ஹீரோவை எட்டி உதைத்த ஹீரோயின்!…

குளியல் காட்சியில் நெருங்கிய  ஹீரோவை எட்டி உதைத்த ஹீரோயின்!… post thumbnail image
சென்னை:-எண்டர்டெயின்மெண்ட் அன்லிமிட்டெட் சார்பில் சஞ்சய் தயாரித்து வரும் படம் ‘தான் மறுமுகம்’. கமல் சுப்பிரமணியம் டைரக்ட் செய்துள்ளார்.படத்தில் வரும் ‘நீயில்லாத…’ என்ற பாடல் காட்சியை அருவியில் படமாக்கிக் கொண்டிருந்தார்கள். அப்போது படத்தின் ஹீரோயின் ஷில்பி ஹீரோவை எட்டி உதைப்பது போல் நடிக்க வேண்டும். இதில் நிஜமாகவே ஹீரோவை, ஹீரோயின் ஷில்பி எட்டி நெஞ்சில் உதைத்து விட ஹீரோ கிஷிக்கு சரியான கோபம்.

தன்னை இதுவரை யாரும் இப்படி எட்டி உதைத்ததில்லை. இந்தப் பெண் தன் நெஞ்சில் மிதித்து விட்டாரே? என கோபத்தில் படப்பிடிப்பிலிருந்து வெளியேறி ஒரு ஓரமாகச் சென்று அமர்ந்து கொண்டார்.இதனால் படப்பிடிப்பு அதிக நேரம் தடைபட்டதால்… ஹீரோயின் சென்று தனது வருத்தத்தை கிஷியிடம் தெரிவித்து அவரை சமாதானம் செய்தார்.

முதல் படமென்பதால் காட்சியில் கொஞ்சம் அதிகப்படியான வேகம் வந்து விட்டது. தவறு என்மீது தான். நான் கவனமாக இருந்திருக்க வேண்டும் என்று ஷில்பி தெரிவிக்க, ஒரு வழியாக அந்தப் பிரச்சனை முடிவுக்கு வந்ததாம்.பிறகு சிரித்த முகத்தோடு அந்தப்பாடல் காட்சியில் ஹீரோயினுடன் நெருக்கம் காட்டினார் ஹீரோ கிஷி.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி