செய்திகள்,முதன்மை செய்திகள்,விளையாட்டு இந்திய அமெச்சூர் குத்துச் சண்டை கழகத்தின் அங்கீகாரம் ரத்து!…

இந்திய அமெச்சூர் குத்துச் சண்டை கழகத்தின் அங்கீகாரம் ரத்து!…

இந்திய அமெச்சூர் குத்துச் சண்டை கழகத்தின் அங்கீகாரம் ரத்து!… post thumbnail image
நியூடெல்லி:-பல்வேறு புகார்கள் வந்ததையடுத்து இந்திய அமெச்சூர் குத்துச் சண்டை கழகத்தின் அங்கீகாரத்தை, சர்வதேச குத்துச் சண்டை கழகம் ரத்து செய்துள்ளது. எனினும் இந்திய வீரர்கள் சர்வதேச குத்துச் சண்டை கழகத்தின் கீழ் போட்டிகளில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள் என்று சர்வதேச குத்துச் சண்டை கழகம் தெரிவித்துள்ளது.

இந்திய அமெச்சூர் குத்துச் சண்டை கழக நிர்வாகிகள் அதன் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதாக பல்வேறு தரப்பிலிருந்து புகார் வந்ததாக சர்வதேச குத்துச் சண்டை கழக தலைவர் ஜின் குவாயு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். முறையான தேர்தல் நடத்தி புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுக்கும் வரை அங்கீகாரம் அளிக்கப்படமாட்டாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். அதுவரை உலகப் போட்டிகளுக்கான இந்திய வீரர்களை சர்வதேச குத்துச் சண்டை கழகமே தேர்ந்தெடுக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்திய குத்துச் சண்டை கழகத்தின் தற்போதைய நிர்வாகிகளை அங்கீகரிக்குமாறு இந்திய ஒலிம்பிக் சங்க பொதுச்செயலாளர் ராஜுவ் மேத்தா அனுப்பிய கடிதமே, சர்வதேச குத்துச் சண்டை கழகத்தின் இந்த அதிரடி நடவடிக்கைக்கு காரணம் என கூறப்படுகிறது.2012-ம் ஆண்டு முதல் இந்திய குத்துச் சண்டை கழகத்தின் அங்கீகாரம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், இப்போது இந்திய அமெச்சூர் குத்துச் சண்டை கழகத்தின் அங்கீகாரமும் ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி