செய்திகள்,திரையுலகம் விஷால் நடிக்கும் ‘நான் சிகப்பு மனிதன்’ படத்தின் கதை ஹாலிவுட்டில் இருந்து காப்பி அடித்ததா?…

விஷால் நடிக்கும் ‘நான் சிகப்பு மனிதன்’ படத்தின் கதை ஹாலிவுட்டில் இருந்து காப்பி அடித்ததா?…

விஷால் நடிக்கும் ‘நான் சிகப்பு மனிதன்’ படத்தின் கதை ஹாலிவுட்டில் இருந்து காப்பி அடித்ததா?… post thumbnail image
சென்னை:-விஷால், லட்சுமி மேனன் நடிக்கும் ‘நான் சிகப்பு மனிதன்‘ படத்தின் படப்பிடிப்பு முடியும் தருவாயில் உள்ளது. நேற்று வெளியான இந்த படத்தின் டீசர் மிகபெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

விஷால் narcolepsy என்ற அபூர்வ நோய் பாதிக்கப்பட்ட நோயாளியாக இந்த படத்தில் நடித்துள்ளார். திடீர் திடீரென மயங்கி விழுந்து தூங்கிவிடும் இந்த கேரக்டரை ஏற்றிருக்கும் விஷால், அந்த நோயால் பாதிக்கப்பட்டிருந்தும் வில்லன்களை எப்படி சமாளிக்கிறார் என்பதே கதை. narcolepsy என்ற நோயால் பாதிக்கப்பட்டவர்களை முழுமையாக குணப்படுத்த இதுவரை மருந்துகள் கண்டுபிடிக்கப்படவில்லை. இந்த புதுமையான சப்ஜெக்டை வைத்து திரு விறுவிறுப்பாக இந்த கதையை நகர்த்தியுள்ளார்.

ஹாலிவுட்டில் ஏற்கனவே narcolepsy கதையை மையமாக வைத்து பல படங்கள் வந்துள்ளன. My Own Private Idaho, Badits, Male Gigolo, Mouline Rouge ஆகிய படங்கள் இதில் முக்கியமானவை. ஏற்கனவே திரு எடுத்த சமர் திரைப்படம் ஒரு ஹாலிவுட் படத்தை தழுவி எடுக்கப்பட்டது என்று கூறப்பட்டு வரும் நிலையில் ‘நான் சிகப்பு மனிதன்’ என்ற படமும் மேற்கண்ட எந்த ஹாலிவுட் படத்தில் இருந்து காப்பி அடித்தது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி