அரசியல்,செய்திகள் ராஜீவ் கொலை வழக்கில் கைதான நளினி உள்பட 7 பேர்களும் விடுதலை… ஜெயலலிதா அதிரடி அறிவிப்பு…

ராஜீவ் கொலை வழக்கில் கைதான நளினி உள்பட 7 பேர்களும் விடுதலை… ஜெயலலிதா அதிரடி அறிவிப்பு…

ராஜீவ் கொலை வழக்கில் கைதான நளினி உள்பட 7 பேர்களும் விடுதலை… ஜெயலலிதா அதிரடி அறிவிப்பு… post thumbnail image
சென்னை:-முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூன்று பேர்களுக்கும் ஆயுள் தண்டனையாக மாற்றி நேற்று தீர்ப்பு அளித்த உச்சநீதிமன்ற நீதிபதி, அவர்களை விடுதலை செய்வது குறித்து தமிழ்நாடு அரசு முடிவு எடுக்கலாம் என்று தனது தீர்ப்பில் கூறியிருந்தார். இதை தொடர்ந்து இன்று சட்டசபையில் 110வது விதியின் கீழ் அறிக்கை ஒன்றை வாசித்த முதல்வர் ஜெயலலிதா ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்ட மூன்று பேர் உள்பட ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறைதண்டனை அனுபவிக்கும் 7 பேர்களையும் விடுதலை செய்ய அரசு முடிவு செய்திருப்பதாக தெரிவித்தார்.

இவர்கள் 7 பேர்களையும் விடுதலை செய்யுமாறு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்போவதாகவும், மத்திய அரசு இதற்கான பதிலை அளிக்காவிட்டால், தமிழக அரசு தனது அதிகாரத்தை பயன்படுத்தி 7 பேர்களையும் விடுதலை செய்யும் என்று அவர் கூறினார்.முதல்வரின் இந்த அறிவிப்புக்கு தமிழக அரசியல் கட்சிகள் தலைவர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். உலகெங்கிலும் வாழும் தமிழ் இன மக்கள் பட்டாசுகளை வெடித்து கொண்டாடினர். சென்னையில் இன்று காலை பல இடங்களில் சாலைகளில் பட்டாசுகளை வெடித்து தங்கள் மகிழ்ச்சியினை வெளிப்படுத்தியதோடு தமிழக முதல்வருக்கு தங்கள் நன்றியினையும் தெரிவித்துக்கொண்டனர்.

முதல்வரின் அறிவிப்பு குறித்த செய்தி வெளிவந்தவுடன் பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள் முதல்வர் ஜெயலலிதாவை கோட்டையில் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார்.தமிழக அரசியல் தலைவர்கள் கருணாநிதி, திருமாவளவன், வீரமணி, பொன்.ராதாகிருஷ்ணன் போன்ற தலைவர்கள் 7 பேர்களின் விடுதலை அறிவிப்பை வரவேற்றுள்ளனர்.மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் இதுகுறித்து கூறும்போது, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன் உள்பட 7 பேரையும் விடுதலை செய்யும் தமிழக அரசின் முடிவு தமக்கு வருத்தம் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி