செய்திகள் பூமியை தாக்க வரும் ராட்சத விண்கல்!…

பூமியை தாக்க வரும் ராட்சத விண்கல்!…

பூமியை தாக்க வரும் ராட்சத விண்கல்!… post thumbnail image
லண்டன்:-விண்வெளியில் ஏராளமான விண்கற்கள் உள்ளன. இவற்றை எரி கற்கள் என்றும் அழைப்பதுண்டு. புவி ஈர்ப்பு விசை இல்லாததால் விண்வெளியில் மிதக்கின்றன. அவற்றில் சில காற்று மண்டலத்துக்குள் புகுந்தவுடன் புவி ஈர்ப்பு விசை காரணமாக பூமியில் விழுகின்றன.

இவ்வாறு விழும் பெரும்பாலானவை எரிந்து சாம்பலாகிவிடும். ஒரு சில கல் பூமியில் விழுந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. இது போன்ற ஒரு பெரிய விண்கல் கடந்த ஆண்டு ரஷியாவில் விழுந்தது. அதில் 1200 பேர் காயம் அடைந்தனர்.
இது போன்ற மற்றொரு ராட்சத கல் தற்போது பூமியை நோக்கி பாய்ந்து வருகிறது. இது 3 கால்பந்து மைதானம் அளவு பெரியது. அது மணிக்கு 43 ஆயிரம் கி.மீட்டர் வேகத்தில் பறந்து வருகிறது. இதற்கு 2000 இ.எம்.26 என பெயரிட்டுள்ளனர்.

இது பூமிக்கு அருகே வந்து கொண்டிருக்கிறது. இந்த விண்கல் வருகிற திங்கட்கிழமை (24–ந் தேதி) பூமியை தாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.‘‘ரொபோடிக் டெலஸ்கோப்’’ மூலம் இந்த விண்கல்லை விஞ்ஞானிகள் கண்டு பிடித்தனர். இத்தகவல் ஸ்தூக் டாட் காம் என்ற இணையதளத்தில் வெளியாகி உள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி