செய்திகள்,திரையுலகம் தாய் – மகள் உறவை ஆழமாக வெளிப்படுத்தும் படம் ‘வெண்மேகம்’…இயக்குனர்கள் பேட்டி…

தாய் – மகள் உறவை ஆழமாக வெளிப்படுத்தும் படம் ‘வெண்மேகம்’…இயக்குனர்கள் பேட்டி…

தாய் – மகள் உறவை ஆழமாக வெளிப்படுத்தும் படம் ‘வெண்மேகம்’…இயக்குனர்கள் பேட்டி… post thumbnail image
சென்னை:-இரட்டை சகோதரர்கள் ராம் மற்றும் லட்சுமணன் இயக்கிய ‘வெண்மேகம்’ திரைப்படம் வருகிற 21–ந் தேதி தமிழகமெங்கும் வெளியாக உள்ளது. வெண்மேகம் படம் குறித்து இயக்குனர்கள் ராம் – லட்சுமணன் கோவையில் நிருபர்களிடம் கூறியதாவது:–

வெண்மேகம் படம் குடும்பபாங்கான, காமெடி மற்றும் திரில்லர் ஆக்ஷன் நிறைந்த சினிமா ஆகும். இந்த படம் அனைத்து தரப்பினருக்கும் மிகவும் பிடிக்கும். இந்த படத்தில் மைனா பட விதார்த் கதாநாயகனாகவும், பிரபல மாடல் அழகி இஷாரா கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். இவர்களுடன் பள்ளி மாணவியான ஜெயஸ்ரீ சிவதாஸ், முன்னணி காமெடி நடிகர்கள் நடித்துள்ளனர். படத்தில் தாய் – மகளுக்கு இடையேயான உறவை ஆழமாக வெளிப்படுத்தி உள்ளோம்.

படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்கள் மிக பிரமாண்டமாக வெளிவந்துள்ளன. படத்தில் கோவை தனபால் எழுதியுள்ள பாடல் ஒன்றும் இடம் பெற்றுள்ளது. படத்தின் முடிவில் படத்திற்கு வெண்மேகம் என ஏன் பெயர் வைத்துள்ளோம் என்பதை ரசிகர்களே தெரிந்து கொள்வார்கள். பேட்டியின் போது ஏ.பி.சாமி, ஏ.பி.செவ்வேள் ஆகியோர் உடனிருந்தனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி