செய்திகள்,திரையுலகம் காதலர் தினத்தில் சிம்பு வெளியிட்ட ‘வாலு’ புரமோ பாடல்…

காதலர் தினத்தில் சிம்பு வெளியிட்ட ‘வாலு’ புரமோ பாடல்…

காதலர் தினத்தில் சிம்பு வெளியிட்ட ‘வாலு’ புரமோ பாடல்… post thumbnail image
சென்னை:-சிம்பு நடித்த வாலு படத்தின் புரமோ பாடல் நேற்று வெளியானது. காதலர் தினமான நேற்று புரமோ பாடலை வெளியிட்டு, தனது ரசிகர்களுக்கு சிம்பு, காதலர் தின வாழ்த்துக்களை தனது டுவிட்டர் தளத்தில் கூறியுள்ளார்.

சிம்பு தனது டுவிட்டரில் ‘வாலு’ படத்தின் புரமோ பாடல் வெளியிட்ட மறு நிமிடத்தில் இருந்து என்னுடைய மொபைலில் அழைப்புகள் தொடர்ந்து வந்தவண்ணம் இருக்கின்றது. இந்த அளவுக்கு புரமோ பாடல் மிகப்பெரிய ஹிட் ஆகும் என்று நான் கொன்சம்கூட எதிர்பார்க்கவில்லை. எனது ரசிகர்களுக்கு காதலர் தின வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார்.சிம்புவை போலவே தனுஷும் தனது ரசிகர்களுக்கு காதலர் தின வாழ்த்துக்களை கூறியுள்ளார். அவர் நடித்துள்ள வேலையில்லா பட்டதாரி படத்தின் பாடல்கள் வெளியாகியுள்ளது. தனது படத்தின் பாடல்களை மிகப்பெரிய வெற்றியாக்கிய தனது ரசிகர்களுக்கு நன்றி என அவர் தனது டுவிட்டர் தளத்தில் தெரிவித்துள்ளார்.சிம்புவும் தனுஷும் காதலர் தினத்தன்று தங்களது ரசிகர்களுக்கு சிறப்பு டுவிட்டர் விருந்து கொடுத்துள்ளதாக கோலிவுட்டில் கூறப்படுகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி