செய்திகள்,திரையுலகம் ‘தி டே’ தயாரிப்பாளருடன் சேர்ந்து ஸ்ருதிஹாசன் ஆடிய நாடகம் அம்பலம்…

‘தி டே’ தயாரிப்பாளருடன் சேர்ந்து ஸ்ருதிஹாசன் ஆடிய நாடகம் அம்பலம்…

‘தி டே’ தயாரிப்பாளருடன் சேர்ந்து ஸ்ருதிஹாசன் ஆடிய நாடகம் அம்பலம்… post thumbnail image
சென்னை:-‘தி டே‘ படத்தின் தமிழ் மொழியாக்கம் வருகிற 14 ஆம்தேதி ரிலீஸ் ஆவது உறுதியாகியுள்ளது. தயாரிப்பாளர் எதிர்பார்த்ததை விட அதிக தியேட்டர்கள் புக் ஆகியுள்ளன. இந்நிலையில் இந்த படம் குறித்து ஸ்ருதிஹாசனும், தயாரிப்பாளரும் சேர்ந்து நடத்திய நாடகம் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

முதலில் கடந்த மாதம் ‘தி டே ‘ படத்தின் தயாரிப்பாளர் முடிவு செய்தபோது, இந்த படத்தை வெளியிட யாருமே முன்வரவில்லை. பொதுவாக இந்தியில் வெளியான படங்களில் எவ்வளவு பெரிய நடிகர் நடித்திருந்தாலும், அதை அப்படியே தமிழில் டப் செய்தால் ஓடாது. இதற்கு சமீபத்திய உதாரணம் தனுஷ் நடித்த ராஞ்சனா படத்தை சொல்லலாம். இந்தியில் ராஞ்சனா நன்றாக ஓடினாலும், தமிழில் ஒரு வாரம் கூட ஓடவில்லை.

எனவேதான் தயாரிப்பாளரும், ஸ்ருதிஹாசனும் இணைந்து இந்த எதிர்ப்பு நாடகத்தை நடத்தியதாக தகவல்கள் தற்போது கோலிவுட்டில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே பேசிவைத்துதான் ஸ்ருதிஹாசன் வழக்கு தொடரப்போவதாக மிரட்டியுள்ளார் என்பது தற்போதுதான் பலருக்கு புரிந்துள்ளது. அவர்கள் எதிர்பார்த்தபடியே அதிக தியேட்டர்களும் புக் ஆகியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் படம் ரிலீஸ் ஆனால்தான் தெரியும் இவர்களது நாடகம் எந்தளவுக்கு வெற்றி பெற்றுள்ளது என்பது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி