செய்திகள்,திரையுலகம் காதலர் தினத்தில் நயன்தாராவின் மூன்று படங்கள்…

காதலர் தினத்தில் நயன்தாராவின் மூன்று படங்கள்…

காதலர் தினத்தில் நயன்தாராவின் மூன்று படங்கள்… post thumbnail image
சென்னை:-காதலர் தினமான பிப்ரவரி 14–ந்தேதி நயன்தாராவுக்கு 3 முக்கிய நிகழ்வுகள் நடக்க உள்ளன. ஒன்று உதயநிதி ஜோடியாக நடித்த ‘இது கதிர்வேலன் காதல்’ படம் ரிலீசாகிறது. 300 தியேட்டர்கள் இப்படத்தை திரையிடுகின்றனர். இந்த படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பு இருப்பதாக திரையுலகினர் கணிக்கின்றனர்.

இரண்டாவதாக இதே நாளில் நயன்தாரா நடித்துள்ள ‘நீ எங்கே என் அன்பே‘படத்தின் டிரெய்லரும் வெளியாகிறது. இப்படம் இந்தியில் வித்யாபாலன் நடித்து வெற்றிகரமாக ஓடிய கஹானி படத்தின் தமிழ் ரீமேக் ஆகும். கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதையம்சத்தில் தயாராகியுள்ள படம் மெகா பட்ஜெட்டில் எடுத்துள்ளனர்.

மூன்றாவதாக காதலர் தினத்தன்று பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு ஜோடியாக நடிக்கும் ‘இது நம்ம ஆளு‘ படத்தின் டீசரும் வெளியாகிறது.நயன்தாரா ஏற்கனவே நடித்த ‘ஆரம்பம்’ படம் ‘ராஜா ராணி’ படங்கள் தொடர்ந்து வெற்றி பெற்றன. இதனால் அவரது மார்க்கெட் நிலவரம் உயர்ந்து இருக்கிறது. சம்பளம் ரூ. 2 கோடியை எட்டியுள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி