செய்திகள்,திரையுலகம் நமிதாவை குண்டு என கிண்டல் செய்த இயக்குனர்…

நமிதாவை குண்டு என கிண்டல் செய்த இயக்குனர்…

நமிதாவை குண்டு என கிண்டல் செய்த இயக்குனர்… post thumbnail image
சென்னை:-புதுமுகங்கள் எஸ்.ராஜேஷ், ஜோஸ்னா, வைகா உள்ளிட்டோர் நடிக்கும் படம் மனம் நில்லுனா நிக்காதடி. பிரியதர்ஷனிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய கே.ராமு டைரக்ஷன் செய்கிறார். ஆர்.ஜி.ஆலன் இசை. வெங்கட் ஒளிப்பதிவு. எஸ்.செந்தில் தயாரிப்பு. இப்படத்தின் ஆடியோ- டிரைலர் வெளியிடப்பட்டது.

இதில் இயக்குனர் பேரரசு பேசியதாவது: ஹீரோயினுக்கு அழகு ரொம்பவும் முக்கியம். அது இப்பட ஹீரோயின்களிடம் நிறையவே இருக்கிறது. இப்போதெல்லாம் ஹீரோயின் கிடைப்பது ரொம்ப கஷ்டமாகிவிட்டது. ஒரு படத்தை தொடங்கும்போதுதான் இந்த கஷ்டம் தெரியும். நமீதாவைவிட இங்கிருக்கும் ஹீரோயின்கள் பெரிய ரவுண்டு வரவேண்டும்.நமீதா உடலைப்போல் பெருத்துவிட வேண்டும் என்று சொல்லவில்லை அவர் திரையுலகில் வந்த ரவுண்டைவிட பெரிய ரவுண்ட் வரவேண்டும். சினிமாவில் முதல்படம் ஹிட் கொடுப்பது ஒரு இயக்குனருக்கு பெரிய விஷயம் கிடையாது. 2வது படம்தான் அவரது திறமையை நிரூபிக்கும் என்பதால் அந்த படத்தையும் வெற்றி படமாக தரவேண்டும். இல்லாவிட்டால் சினிமாவில் நீடிக்க முடியாது.

நான் இயக்கிய அடுத்தடுத்த படங்கள் வெற்றியாக அமைந்தன. இவ்வாறு பேரரசு பேசினார். நமீதாவின் தோற்றத்தை பற்றி பேரரசு கூறியதும் விழாவில் சலசலப்பு ஏற்பட்டது. இசை அமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன், தயாரிப்பாளர் சங்க தலைவர் கேயார், டி.சிவா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி