அரசியல்,செய்திகள்,முதன்மை செய்திகள் ஆம் ஆத்மி சார்பில் சோனியாவை எதிர்த்து ஷாஜியாயும்,மோடியை எதிர்த்து மகாத்மா காந்தி பேரன் போட்டி?…

ஆம் ஆத்மி சார்பில் சோனியாவை எதிர்த்து ஷாஜியாயும்,மோடியை எதிர்த்து மகாத்மா காந்தி பேரன் போட்டி?…

ஆம் ஆத்மி சார்பில் சோனியாவை எதிர்த்து ஷாஜியாயும்,மோடியை எதிர்த்து மகாத்மா காந்தி பேரன் போட்டி?… post thumbnail image
புதுடெல்லி:-பாராளுமன்ற தேர்தலில் சுமார் 400 தொகுதிகளில் போட்டியிட ஆம்ஆத்மி கட்சி திட்டமிட்டுள்ளது.குறிப்பாக ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாகி இருக்கும் தற்போதைய எம்.பி.க்கள் மீண்டும் போட்டியிட்டால் அவர்களை எதிர்த்து வேட்பாளர்களை களம் இறக்க ஆம் ஆத்மி ஏற்பாடு செய்துள்ளது.

இதற்கிடையே தேசிய கட்சிகளின் மூத்த தலைவர்களை எதிர்த்து போட்டியிட்டு வாக்காளர்களை கவர ஆம் ஆத்மி தீர்மானித்துள்ளது. அதன்படி பா.ஜ.க. பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை எதிர்த்து மகாத்மா காந்தியின் பேரனும், மேற்கு வங்க மாநில முன்னாள் கவர்னருமான கோபால கிருஷ்ண காந்தியை நிறுத்த ஆம் ஆத்மி கட்சியின் மேலிட தலைவர்கள் ஆலோசித்து வருகிறார்கள்.69 வயதாகும் கோபால கிருஷ்ணகாந்தி தற்போது சென்னையில் வசித்து வருகிறார். மோடியை எதிர்த்து களம் இறக்க அவரை 2 வாரங்களுக்கு முன்பு ஆம் ஆத்மி கட்சியினர் சந்தித்து பேசியதாக தெரிகிறது.மோடியை எதிர்த்து போட்டியிட கோபால கிருஷ்ண காந்தி இதுவரை சம்மதிக்கவில்லை. இதுபற்றி அவர் கூறுகையில், ‘‘நான் ஆம் ஆத்மி கட்சியில் சேரவில்லை. அந்த கட்சி சார்பில் போட்டியிடுவது பற்றி யோசிக்கவில்லை’’ என்றார்.

என்றாலும் கோபால கிருஷ்ண காந்தியை மோடிக்கு எதிராக போட்டியிட வைக்க ஆம் ஆத்மி கட்சித் தலைவர்கள் தொடர்ந்து முயன்று வருகிறார்கள். அந்த முயற்சிக்கு வெற்றி கிடைத்தால் மோடி– காந்தி பேரன் இடையே போட்டி சூடு பிடிக்கும்.காங்கிரஸ் தலைவர் சோனியாவை எதிர்த்து ஆம் ஆத்மி தலைவர்களில் ஒருவரான ஷாஜியா நிறுத்தப்படுவார் என்று தகவல் வெளியாகி உள்ளது. முன்னாள் டி.வி. நிகழ்ச்சி தொகுப்பாளரான ஷாஜியா டெல்லி சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு 300 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் தோற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.இதுபற்றி ஷாஜியாவிடம் கேட்டபோது சோனியாவுக்கு எதிராக களம் இறங்குவது பற்றி இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை என்றார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி