செய்திகள்,விளையாட்டு இந்தியா-நியூசிலாந்து டெஸ்ட் தொடர் ஒரு கண்ணோட்டம்…

இந்தியா-நியூசிலாந்து டெஸ்ட் தொடர் ஒரு கண்ணோட்டம்…

இந்தியா-நியூசிலாந்து டெஸ்ட் தொடர் ஒரு கண்ணோட்டம்… post thumbnail image
இந்திய அணி 8 முறை நியூசிலாந்தில் டெஸ்ட் தொடரில் விளையாடி உள்ளது. இதில் 2 முறை தொடரை வென்றது. 1968–ல் 3–1 என்ற கணக்கிலும் கடைசியாக விளையாடிய 2009–ல் 1–0 என்ற கணக்கிலும் தொடரை கைப்பற்றியது. 4 முறை இழந்தது. 2 முறை சமன் ஆனது.

ஒட்டு மொத்தமாக இரு அணிகள் இடையே 18 டெஸ்ட் தொடர் நடைபெற்று உள்ளது. இந்தியா 10 முறையும், நியூசிலாந்து 4 முறையும் வென்றன. 4 முறை சமநிலையில் முடிந்தது.நியூசிலாந்து மண்ணில் இந்திய அணி 5 டெஸ்டில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. கடந்த முறை சென்ற போது ஹேமில்டன் டெஸ்டில் டோனி தலைமையிலான அணி 10 விக்கெட்டில் வெற்றி பெற்றது. இரு அணிகளும் 52 போட்டியில் மோதியுள்ளனர். இதில் இந்தியா 18 டெஸ்டிலும், நியூசிலாந்து 9 டெஸ்டிலும் வெற்றி பெற்றன. 25 டெஸ்ட் ‘டிரா’ ஆனது.இந்திய அணி 1999ம் ஆண்டு அகமதாபாத்தில் 7 விக்கெட் இழப்புக்கு 583 ரன் குவித்தது தான் அதிகபட்ச ஸ்கோர் ஆகும். நியூசிலாந்து மண்ணில் 2009ம் ஆண்டு ஹேமில்டன் டெஸ்டில் 520 ரன் குவித்து இருந்தது. நியூசிலாந்து அணி 6 விக்கெட்டுக்கு 630 ரன் குவித்தது (2003, மொகாலி) அதிகபட்சம் ஆகும்.

இந்திய அணி 1976ம் ஆண்டு 81 ரன்னில் சுருண்டதே (வெலிங்டன்) குறைந்த பட்ச ஸ்கோராகும். நியூசிலாந்து அணி 2002–ல் ஹேமில்டன் டெஸ்டில் 94 ரன்னில் சுருண்டு இருந்தது.டிராவிட் 15 டெஸ்டில் 1659 ரன் எடுத்து முதலிடத்தில் உள்ளார். 222 ரன் அதிகபட்சமாகும். 6 சதம் அடித்து உள்ளார். தெண்டுல்கர் 24 டெஸ்டில் 4 சதம் உள்பட 1595 ரன் எடுத்து 2–வது இடத்தில் இருக்கிறார். அதிகபட்சம் 217 ஆகும். டவுலிங் 964 ரன் (3 செஞ்சூரி) எடுத்து உள்ளார். 239 ரன் குவித்தது அதிகபட்சமாகும்.ரிச்சர்டு ஹேட்லி அதிகபட்சமாக 65 விக்கெட் (14 டெஸ்ட்) கைப்பற்றி உள்ளார். 23 ரன் கொடுத்து 7 விக்கெட் எடுத்தது இவரது சிறந்த பந்து வீச்சாகும். பிவின்சிங் பெடி 57 விக்கெட்டும், பிரசன்னா 55 விக்கெட்டும், கும்ப்ளே 50 விக்கெட்டும் எடுத்துள்ளனர். தற்போதைய வீரர்களில் ஜாகீர்கான் 38 விக்கெட் (11) கைப்பற்றி உள்ளார்.வெங்கட்ராகவன் 72 ரன் கொடுத்து 8 விக்கெட் எடுத்தது ஒரு இன்னிங்சிலும், அஸ்வின் 85 ரன் கொடுத்து 12 விக்கெட் கைப்பற்றியது ஒரு டெஸ்டிலும் சிறந்த பந்து வீச்சாகும்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி