செய்திகள்,திரையுலகம் ஒரே படத்தில் லக்ஷ்மி மேனன்,இனியா என இருவருக்கும் ‘லிப் கிஸ்’ அடித்த விஷால்…

ஒரே படத்தில் லக்ஷ்மி மேனன்,இனியா என இருவருக்கும் ‘லிப் கிஸ்’ அடித்த விஷால்…

ஒரே படத்தில் லக்ஷ்மி மேனன்,இனியா என இருவருக்கும் ‘லிப் கிஸ்’ அடித்த விஷால்… post thumbnail image
சென்னை:-விஷால் தற்போது தயாரித்து நடித்து கொண்டிருக்கும் புதிய படம் நான் சிகப்பு மனிதன். இந்த படத்தில் லட்சுமி மேனனுடன் லிப் கிஸ் காட்சியில் நடித்து சமீபத்தில் ஊடகங்களை பரபரப்பாக பேசவைத்தார் விஷால். அந்த பரபரப்பு அடங்குவதற்குள் மீண்டும் அதே படத்தில் இனியாவுடன் ஒரு லிப் கிஸ் காட்சியில் நடித்த செய்த வந்துள்ளது.

இதுகுறித்து விஷால் கூறும்போது, நான் சிகப்பு மனிதன் எனக்கு ஒரு பெரும் திருப்பத்தை கொடுக்கும் படமாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. இந்த படத்தில் ஒரு சிறிய கேரக்டரில் இனியா நடித்துள்ளார். அந்த கேரக்டருக்கு மிகப்பொருத்தமாக அவர் இருந்ததை பார்த்து நாங்கள் எல்லோரும் ஆச்சரியபட்டோம். இந்த படத்தில் இனியாவுடன்ஒரு லிப் கிஸ் காட்சியில் நடித்துள்ளேன். ஒரே டேக்கில் காட்சி ஓகே ஆனது சற்று வருத்தமளிக்கிறது என்றார்.

‘நான் சிகப்பு மனிதன்’ படத்தை விஷால் யூடிவி மோஷன் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கிறார். ஒரு தயாரிப்பாளராக பாண்டியநாடு படத்தில் வெற்றி பெற்ற விஷால், இந்த படத்திலும் தனது வெற்றியை தொடருவார் என கூறப்படுகிறது. திரு இயக்கும் இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இந்த படம் வரும் மே மாதத்தில் திரைக்கு வருகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி