செய்திகள்,திரையுலகம் ஆர்யாவுடன் சேர்ந்தார் ஹன்சிகா…

ஆர்யாவுடன் சேர்ந்தார் ஹன்சிகா…

ஆர்யாவுடன் சேர்ந்தார் ஹன்சிகா… post thumbnail image
சென்னை:-இந்த வருடம் ஹன்சிகாவுக்கு திரை வாழ்க்கையில் 2014 மிக முக்கியமானதாக இருக்கும் என்று கூறியிருக்கிறார். இந்த வருடம் அவரின் தமிழ் மற்றும் தெலுங்கில் நிறைய படங்கள் ரிலீசுக்கு ரெடியாகிக்கொண்டிருக்க தற்போது புதிதாக ஒரு தமிழ் படத்திலும் கமிட் ஆகியிருக்கிறார் ஹன்சிகா.

ஆர்யா கதாநாயகனாக நடிக்கும் மீகாமன் படத்தில் முதலில் ஸ்ருதிஹாசனை நாயகியாக புக் செய்த இயக்குநர் பின் ஏதோ சில காரணங்களால் ஹன்சிகாவை கதாநாயகியாக மாற்றிவிட்டார். தற்போது மீகாமன் படத்தில் இருந்து ஸ்ருதி தூக்கப்பட்டு ஹன்சிகா சேர்க்கப்பட்டுள்ளார்.

சேட்டை படத்திற்கு பிறகு மீண்டும் ஆர்யா-ஹன்சிகா இணைந்து நடிக்கிறார்கள். தடையற தாக்க படத்தை இயக்கிய மகிழ் திருமேனி இந்த படத்தை இயக்க, தமண் இசையமைக்கிறார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி