செய்திகள்,திரையுலகம் நயன்தாரா தான் வேணும் அடம் பிடிக்கும் தனுஷ்…

நயன்தாரா தான் வேணும் அடம் பிடிக்கும் தனுஷ்…

நயன்தாரா தான் வேணும் அடம் பிடிக்கும் தனுஷ்… post thumbnail image
சென்னை:-தனுஷ் தற்போது கே.வி. ஆனந்த் இயக்கத்தில் ‘அநேகன்’ படத்திலும், வேல்ராஜ் இயக்கத்தில் ‘வேலை இல்லா பட்டதாரி’ படத்திலும் நடித்து வருகிறார்.

இந்த படங்களையடுத்து ‘காதலில் சொதப்புவது எப்படி’ படத்தை இயக்கிய பாலாஜி மோகன் இயக்கத்தில் ஒரு படத்திலும் தனுஷ் ‘படிக்காதவன், மாப்பிள்ளை’ படங்களை இயக்கிய சுராஜ் இயக்கத்தில் ஒரு படத்திலும் நடிக்க உள்ளார்.இதில் சுராஜ் இயக்கும் படத்தில் தனது ஜோடியாக நயன்தாராதான் நடிக்க வேண்டும் என இயக்குனரிடம் தனுஷ் கண்டிப்புடன் கூறிவிட்டாராம்.சிம்பு தற்போது நடித்து வரும் படத்தில் நயன்தாரா ஜோடியாக நடிப்பதுதான் இதற்குக் காரணம் என்று சொல்கிறார்கள்.தனுஷ், நயன்தாரா ஏற்கெனவே ஜோடியாக நடித்த ‘யாரடி நீ மோகினி’ திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. அந்த படம் வெளிவந்த ஏறக்குறைய 6 ஆண்டுகள் ஆகி விட்டது.

சிம்பு கூடவே நடிக்கும் போது தற்போது ஹிந்தியிலும் அறிமுகமாகி இந்திய அளவில் பேசப்படும் நடிகராகி விட்ட தன்னுடன் நயன்தாரா மீண்டும் நடிக்க மாட்டாரா என்ன ? என்று தனுஷ் கேட்டு வருகிறாராம்.ஆனால், நயன்தாராவோ இப்போது 2 கோடிக்கும் மேல் சம்பளம் வாங்குவதால் படத்தின் பட்ஜெட்டில் எப்படி சரிக்கட்டுவது என இயக்குனர் சுராஜ் தவிக்கிறார் என்கிறார்கள்.‘அலெக்ஸ் பாண்டியன்’ தோல்வியால் மற்ற ஹீரோக்கள் யாரும் கண்டு கொள்ளாத நிலையில் தனுஷ் மனசு வந்து கால்ஷீட் கொடுத்துள்ளதால் சுராஜ் எப்படியும் நயன்தாராவை தனுஷ் ஜோடியாக நடிக்க வைப்பது கட்டாயம் என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி