செய்திகள்,திரையுலகம் விஜய்யை முந்திய சிவகார்த்திகேயன்…

விஜய்யை முந்திய சிவகார்த்திகேயன்…

விஜய்யை முந்திய சிவகார்த்திகேயன்… post thumbnail image
சென்னை:-பொங்கல் தினமான கடந்த 14ம் தேதியன்று முக்கிய தொலைக்காட்சிகளில் உலகத் தொலைக்காட்சி வரலாற்றில், திரைக்கு வந்து ஒரு சில மாதங்களே ஆன புத்தம் புதிய திரைப்படங்கள் ஒளிபரப்பாகின.

சன் டிவியில் விஜய், அமலா பால் நடித்த ‘தலைவா’ படமும், விஜய் டிவியில் ஆர்யா, நயன்தாரா, ஜெய், நஸ்ரியா நடித்த ‘ராஜா ராணி’ , ஜெய், நிவேதா நடித்த ‘நவீன சரஸ்வதி சபதம்’ ஆகிய திரைப்படங்களும், ராஜ் டிவியில் விஷால் நடித்த ‘பாண்டிய நாடு’ திரைப்படமும், கலைஞர் தொலைக்காட்சியில் சிவகார்த்திகேயன், ஸ்ரீதிவ்யா நடித்த ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படமும் ஒளிபரப்பாகின.மறுநாளான 15ம் தேதி சன் டிவியில் கார்த்தி, அனுஷ்கா நடித்த ‘அலெக்ஸ் பாண்டியன்’ திரைப்படமும், விஜய் டிவியில் விஜய்சேதுபதி, நந்திதா நடித்த ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ திரைப்படமும், ராஜ் டிவியில் ‘பாண்டிய நாடு’ திரைப்படமும், ஜீ தமிழ் தொலைக்காட்சியில் விமல் நடித்த ‘தேசிங்கு ராஜா’ திரைப்படமும் ஒளிபரப்பாகின.

மேற்கண்ட படங்களில் சிவகார்த்திகேயன் நடித்த ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படம்தான் அனைத்து தொலைக்காட்சி ரசிகர்களிடத்திலும் ‘ரேட்டிங்கில்’ அதிகப்படியான வரவேற்பைப் பெற்று 12.29 டிஆர்பி பெற்று முதலிடம் பெற்றுள்ளது.அது மட்டுமல்ல தனியார் தமிழ்த் தொலைக்காட்சிகளின் 22 வருட கால வரலாற்றில் சன் டிவியில் ஒளிபரப்பான திரைப்படங்கள்தான் ரேட்டிங்கில் முதலிடத்தைப் பிடித்து வந்தன. மற்ற தொலைக்காட்சிகள் எந்த புதுப் படங்களை ஒளிபரப்பினாலும் சன் டிவிக்கு அடுத்தே ரேட்டிங்கில் இடம் பிடித்து வந்தன. அதை கலைஞர் தொலைக்காட்சி முதல் முறையாக முறியடித்து புதிய சாதனையை புரிந்துள்ளது.

‘தலைவா’ படத்திற்கு 11.39 டிஆர்பி, ‘ராஜா ராணி’ படத்திற்கு 7.36 டிஆர்பி, ‘பாண்டிய நாடு’ படத்திற்கு 3.76 டிஆர்பி, ‘அலெக்ஸ் பாண்டியன்’ படத்திற்கு 8.67 டிஆர்பி, ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்திற்கு 3.34 டிஆர்பி, ‘தேசிங்கு ராஜா’ படத்திற்கு 3.66 டிஆர்பி கிடைத்துள்ளன.இதன் மூலம் தொலைக்காட்சி ரசிகர்களிடம் சிவகார்த்திகேயன் அதிக வரவேற்பைப் பெற்று விஜய், விஷால், ஆர்யா, கார்த்தி, விஜய் சேதுபதி, ஜெய், விமல் ஆகியோரை பின்னுக்குத் தள்ளியிருக்கிறார்.வருத்தப்படாத வாலிபர் சங்கம் வெள்ளித் திரையில் மட்டுமல்ல சின்னத்திரையிலும் மாபெரும் சாதனை படைத்திருக்கிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி