2028 இந்தியாவின் நிலை ?…

2028 இந்தியாவின் நிலை ?… post thumbnail image
லண்டனில் இருந்து செயல்படும் சிபர்ஸ் என்னும் பொருளாதார ஆய்வு மையம் இந்த தகவலை வெளியிட்டு்ள்ளது. இதன் படி வரும் 2028-ம் ஆண்டில் இந்தியா பொருளாதார ரீதியாக உலகிலேயே மூன்றாவது பெரிய நாடாக மாறும் என கணக்கெடுப்பில் கண்டறியப்பட்டுள்ளது.

தற்போதை நிலவரப்படி 1.7 பில்லியன் டாலர் ஜிடிபி வளர்ச்சியோடு 11-வது இடத்தில் உள்ள இந்தியா 2018-ம் ஆண்டில் 2 ஆயிரத்து 481 பில்லியன் டாலர் ஜிடிபி வளர்ச்சியுடன்ஒன்பதாவது இடத்தை பிடிக்க உள்ளதாகவும், இதே காலகட்டத்தில் ரஷ்யா 6, மெக்சிகோ 12 , கொரியா 13-வது இடங்களையும் பிடிக்கும் என அறிக்கை வெளியிட்டுள்ளது.

மேலும் 2023-ம் ஆண்டில் இந்தியா 4 ஆயிரத்து 124 பில்லியன் டாலருடன் ஜிடிபி வளர்ச்சியோடு 4-வது இடத்தையும் பிடிக்கும் எனவும் தெரிவித்துள்ளது.

2028-ம் ஆண்டில் 6 ஆயிரத்து பில்லியன் டாலர் ஜிடிபி வளர்ச்சியுடன் மூன்றாவது இடத்தை இந்தியா பிடிக்கும். இந்த கால கட்டத்தில் அமெரிக்கா, சீனாவிற்கு அடுத்த படியாக பொருளாதார ரீதியாக மூன்றாவது இடத்தை பிடிக்கும் இந்தியா ஜப்பானை பின்னுக்கு தள்ளிவிடும் எனவும் தெரிவித்துள்ளது. மேலும் இக்கால கட்டத்தில் கனடா நாடு 10-வது இடத்தை பிடிக்கும் எனவும் ஆய்வில் கூறியுள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி