திரையுலகம்,முதன்மை செய்திகள் தல அஜீத்துடன் மோத தயாராகும் ஆர்யா

தல அஜீத்துடன் மோத தயாராகும் ஆர்யா

Actor Ajith,Nayanthara and Arya in Vishunvardharn movie

காணொளி:-

பில்லா 2 படம் முடிவடைந்த ரீலிசுக்கு காத்திருக்கும் நிலையில் தல அஜீத் அடுத்து விஷ்ணுவர்தன் இயக்கும் புதிய படத்தில் நடிக்க உள்ளார்.இந்த படத்தில் நாயகிகளாக நயந்தாரா, டாப்சி ஆகியோர் நடிக்க இருக்கின்றனர்.

இந்த படத்தில் முக்கிய வில்லனாக நடிக்க ஆர்யாவை அணுகி உள்ளனர் தல படம் என்றவுடன் உடனடியாக சரி என்று சொல்லி இருக்கிறார் நடிகர் ஆர்யா. இந்த படத்தில் வில்லன் வேடத்தில் நடிக்க பலரும் முன் வராத நிலையில், அஜீத் படத்தில் எந்த வேடம் கொடுத்தாலும் நடிப்பேன் என தானாக முன் வந்து ஆர்யா நடிக்கிறாராம். இந்த படத்தில் ஆர்யாவிற்கு ஜோடி கிடையாது.டாப்சி ஒரு மாறுபட்ட கேரக்டரில் இப்படத்தில் நடிக்கிறார்.

தமிழ் சினிமாவில் நுழையும் போது ஆர்யா வில்லனாக கலக்கியது யாவரும் அறிந்ததே, அதே அதிரடியை இந்த படத்திலும் நிச்சயம் எதிர்பார்க்கலாம். அஜீத்துடன் ஆர்யா சேர்ந்தால் படத்தில் அனல் பறக்கும் என்பது உறுதி.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

Comments are closed.