திரையுலகம் களவாணி ஓவியாவின் தி.நகர் படம்…

களவாணி ஓவியாவின் தி.நகர் படம்…

Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper,Tamilnadu politics,kollywood,Tamil Cinema

களவாணி ஓவியாவுக்கு நேற்று வரை கதவை திறந்தே வைத்திருந்த தி.நகர் வியாபாரிகள் திடீர் கதவடைப்பு செய்திருக்கிறார்கள் இப்போது. காரணம் அவரது அலட்டல்

களவாணி ஹிட் என்றதும் ‘மன்மதன் அம்பு’ படத்தில் மாதவனுடன் நடிக்க அழைக்கப்பட்டார் ஓவியா. பெரிய பேனர். கமல் நடிக்கிற படம் என்றதும் கர்வம் தானாக வந்து மடியில் உட்கார்ந்து கொண்டது . ஆனால் அந்த படத்தில் ‘சாப்டீங்களா…’ என்ற ஒரே டயலாக் அவ்வளவு தான். தி.நகரில் புகழ் பெற்ற துணிக்கடை ஒன்று இவரை வைத்து விளம்பர படம் எடுக்க ஆசைப்பட்டது. முதலில் ஓ.கே சொன்ன ஓவியா, படப்பிடிப்புக்கு கிளம்புகிற நேரத்தில் சம்பளம் போதவில்லை என்றாராம்.

ஏற்கனவே பேசியதுதானே என்றார்களாம். இவர் ஒன்று கேட்க, அவர்கள் ஒன்று சொல்ல, பேச்சு வார்த்தை முறிந்தது! அப்புறம் என்ன? ஓவியாவுக்கு பதிலாக வேறொருவர் கிடைக்காமலா போய்விடுவார்… குறித்த நேரத்தில் ஷூட்டிங்கை முடித்தார்களாம் கடைக்காரர்கள்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி