திரையுலகம் கமலின் மன்மதன் அம்பு அமெரிக்காவில் பிரம்மாண்ட வெளியீடு

கமலின் மன்மதன் அம்பு அமெரிக்காவில் பிரம்மாண்ட வெளியீடு

Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper,Tamilnadu politics,kollywood,Tamil Cinema

கமல்ஹாஸன் நடித்த மன்மதன் அம்பு திரைப்படம் 65 அமெரிக்க திரையரங்குகளில் வரும் டிசம்பர் 23-ம் தேதி ரிலீஸாகிறது.

உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பில் கே எஸ் ரவிக்குமார் இயக்கியுள்ள இந்தப் படத்தில் கமல், த்ரிஷா, மாதவன், சங்கீதா, ஓவியா நடித்துள்ளனர். யு சான்றிதழ் தரப்பட்டுள்ளது.

உலகமெங்கும் தமிழ், தெலுங்கு மொழிகளில் மன்மதன் அம்பு ரிலீஸாகிறது. இதில் அமெரிக்காவில் 65 திரையரங்குகளில் இந்தப் படம் வெளியாகிறது.

கமல் ஹாஸன் படங்களைப் பொறுத்தவரை, அமெரிக்காவில் இத்தனை திரையரங்குகளில் வெளியாகும் படம் இதுவே.

பாரத் கிரியேஷன்ஸ் நிறுவனம் படத்தை விநியோகித்துள்ளது. தமிழகம் மற்றும் ஆந்திராவில் ஜெமினி நிறுவனம் வெளியிடுகிறது. பொதுவாக மற்றவர்கள் தயாரிக்கும் படங்களை வாங்கி வெளியிடும் உதயநிதி ஸ்டாலின், இந்தப் படத்தை மட்டும் ஜெமினிக்கு விற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி