திரையுலகம்,முதன்மை செய்திகள் உதயநிதி நடிக்கும் ‘நண்பேண்டா’

உதயநிதி நடிக்கும் ‘நண்பேண்டா’

udhyanidhi

தயாரிக்கும் படங்களையெல்லாம் ஹிட்டாக்கி விடும் உதயநிதி, அடுத்து தான் நடிக்கப் போகும் படத்தையும் ஹிட்டாக்குவதற்கு தயாராகி வருகிறார். ஆதவன் படத்தில் ஒரே ஒரு காட்சில் வந்து தலை காட்டிவிட்டுப் போன, உதயநிதியை அவருக்குத் தெரிந்தவர்கள் எல்லாம் நடிக்கச் சொல்லி வற்புறுத்த நடிப்புக் களத்தில் குதித்து விட்டார் உதயநிதி இவரை இயக்கப் போகிறார் ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ வெற்றிப் படத்தை இயக்கிய ராஜேஷ். இவர் உதயநிதியை வைத்து இயக்கும் படத்திற்கு இரண்டு டைட்டிலை தேர்வு செய்துள்ளார். ‘ஒருகல் ஒரு கண்ணாடி’, ‘நண்பேண்டா’ இந்த இரண்டில் ‘நண்பேண்டா’ டைட்டிலாக அமைய வாய்ப்பபுகள் அதிகம். இந்தப் படமும் 100% காமெடியாக இருக்குமாம்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி