அரசியல் எஸ்.வி.சேகரைத் தொடர்ந்து ராதாரவியும் ராகுலைச் சந்தித்தார்-காங்.கில் இணைகிறார்.

எஸ்.வி.சேகரைத் தொடர்ந்து ராதாரவியும் ராகுலைச் சந்தித்தார்-காங்.கில் இணைகிறார்.

Radaharavi and S.Ve sekar going to join in Congress party

நடிகர் எஸ்.வி.சேகரைத் தொடர்ந்து நடிகர் ராதாரவியும் இன்று ராகுல் காந்தி யைச் சந்தித்துப் பேசினார். காங்கிரஸில் சேர விரும்பினால், இ மெயில் மூலம் தனக்கு தகவல் அனுப்புமாறு அவரிடம் ராகுல் காந்தி கேட்டுக் கொண்டாராம்.

திராவிடக் கட்சிகளைப் போல நடிகர்கள் பின்னால் போக ஆரம்பித்துள்ளது காங்கிரஸ் . கிடைக்கிற நடிகர்களையெல்லாம் கட்சியில் சேர்க்க முடிவு செய்து விட்டது போலத் தெரிகிறது. முன்பு விஜய்யை முயற்சித்துப் பார்த்தார்கள், முடியவில்லை. அஜீத்தையும் இழுக்க முயன்றனர், அதுவும் சரிவரவில்லை. இந்த நிலையில் தற்போது கிடைக்கிற நடிகர், நடிகைகளை இழுக்க முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

சமீபத்தில் காமெடி நடிகர் எஸ்.வி.சேகர் டெல்லி போய் ராகுல் காந்தியை சந்தித்துப் பேசினார். முன் கூட்டியே இமெயில் மூலம் ராகுல் காந்தியிடம் நேரம் கேட்டு அதன்படி போய்ப் பார்த்தார். இதையடுத்து விரைவில் தான் காங்கிரஸில் சேரப் போவதாக கூறியுள்ளார் சேகர்.

இந்த நிலையில் இன்று வில்லன் நடிகர் ராதாரவி ராகுல் காந்தியை டெல்லி சென்று சந்தித்துப் பேசினார். நேற்று டெல்லி சென்ற அவர், சோனியா காந்தி வீட்டுக்கு இன்றுகாலை போய் ராகுல் காந்தியை சந்தித்து 10 நிமிடங்கள் பேசி விட்டு வந்தார்.

இதுகுறித்து ராதாரவி கூறுகையில், திரைப்பட விழா தொடர்பாக ராகுல் காந்தியை அழைக்குச் சென்றிருந்தேன். தமிழக அரசியல் நிலவரம் குறித்தும் பேசினோம்.

காங்கிரஸில் சேருவதாக இருந்தால் இமெயில் மூலம் எனக்குத் தகவல் அனுப்புங்கள் என்று ராகுல் காந்தி கேட்டுக் கொண்டார். ஒருவாரத்தில் இதுகுறித்து முடிவெடுத்து அறிவிப்பேன்.

ராகுல் காந்தியை எனக்குப் பிடிக்கும். அவர் ஒரு சக்தி வாய்ந்த தலைவர் என்று கூறினார் ராதாரவி.

ராதாரவி பல கட்சிகளைப் பார்த்தவர். ஆரம்பத்தில் திமுகவில் தீவிரமாக இருந்தார். எம்.எல்.ஏ. சீட் உள்பட எதுவும் தரப்படவில்லை என்ற அதிருப்தியில் அவரும், எஸ்.எஸ்.சந்திரனும் அங்கிருந்து விலகி மதிமுகவுக்குப் போனார்கள். பின்னர் அதிமுகவில் இணைந்தனர்.

அதிமுகவில் ராதாரவிக்கு சைதாப்பேட்டை எம்.எல்.ஏ. சீட் தரப்பட்டு அதில் வெற்றியும் பெற்றார். பின்னர் காலப்போக்கில் அம்மாவின் மனதிலிருந்து ராதாரவி இறக்கி விடப்பட்டார். அரசியலில் ஈடுபடாமல் ஒதுங்கியிருந்தார். சமீபகாலமாக திமுக தரப்புடன் நட்பு பாராட்டி வந்தார். இருப்பினும் திமுகவில் இணையவில்லை. இந்த நிலையில் காங்கிரஸில் இணைய முடிவு செய்துள்ளார்

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி