திரையுலகம்,முதன்மை செய்திகள் எந்திரன் வடக்கு தேய்கிறது…தெற்கு உயருகிறது….

எந்திரன் வடக்கு தேய்கிறது…தெற்கு உயருகிறது….

rajini

பிரபல தனியார் செய்தி தொலைக்காட்சி சேனலான “ஹெட்லைன்ஸ் டுடே” சமீபத்தில் ஒரு சர்வேயை தன்னுடைய நேயர்களிடத்தில் நடத்தியது.

யார் இந்தியவின் மிகப்பெரிய சூப்பர் ஸ்டார்? என்ற கேள்வியுடன் அ.ரஜினிகாந்த், ஆ.அமிதாப் பச்சான், இ.ஷாரூக்கான், ஈ.சல்மான்கான் என்று அதற்கு வரிசையில் பதில்களையும் தந்து ஓட்டுபோட சொன்னது.

அதற்கு கிடைத்த பதில்கள், ரஜினிக்கு 86.41 சதவீத ஓட்டுக்களும், அமிதாப்பச்சனுக்கு 3.69 சதவீத ஓட்டுக்களும் கிடைத்திருப்பதாய் கொட்டியது. அடுத்திருந்த ஷாரூக்கான் 7.16 சதவீதமும், சல்மான் கானுக்கு 2.74 சதவீத ஓட்டுக்களும் கிடைத்ததாகவும் ஒளிபரப்பியது அந்த சேனல்.

இதனால் பாலிவுட்டின் முடிசூடா மன்னனான அமிதாப்பை ரஜினி தோற்கடித்து விட்டதாய் சர்ச்சைகள் கிளம்பியுள்ளன.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி