Vaaimai

செய்திகள், திரையுலகம்

மாடர்ன் ட்ரண்டிற்கு மாறிய காமெடி நடிகர் கவுண்டமணி!….

சென்னை:-தமிழ் சினிமாவின் ஈடு இணையற்ற நகைச்சுவை நடிகர் கவுண்டமணி. இவர் சில வருடங்களாக சினிமாவில் நடிப்பதை தவிர்த்து வந்தார். நீண்ட இடைவேளைக்கு பிறகு இவர் நடிப்பில் வாய்மை, 49 ஓ ஆகிய படங்கள் ரிலிஸாக உள்ளது. இந்நிலையில் இவர் மீண்டும் பிஸியாக நடிக்க தொடங்கியுள்ளார். தற்போது வந்த தகவலின் படி இவர் அடுத்து ‘எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது’ என்ற படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். இப்படத்தில் டி-சர்ட், ஜீன்ஸ் அணிந்து இந்த கால ட்ரண்டிற்கு ஏற்றார் போல் மாறியுள்ளார்.

செய்திகள், திரையுலகம், முதன்மை செய்திகள்

அற்புதம் அம்மாள் வேடத்தில் நடிக்கிறார் நடிகை பூர்ணிமா!…

சென்னை:-ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை பெற்ற பேரரிவாளனின் விடுதலைக்காக அவரது தாயார் அற்புதம் அம்மாள் கடந்த 22 வருடங்களாக போராடி வருகிறார். இந்த போராட்டத்தை கதை களமாக கொண்டு உருவாகும் படம்தான் வாய்மை. இதில் பூர்ணிமா பாக்யராஜ் மகன் சாந்தனுவும், அவனது நண்பர்கள் பிரித்வியும் , மனோஜ் ஆகியோரும் செய்யாத கொலைக்காக தூக்கு தண்டனை பெறுகிறார்கள். பூர்ணிமா தனி மனுஷியாக போராடி எப்படி அவர்களை மீட்கிறார் என்பதுதான் வாய்மை படத்தின் கதை. இதில் கவுண்டமணி தூக்குத் தண்டனைக்கு எதிராக பேசும் டாக்டர் கேரக்டரில் நடித்திருக்கிறார். இது நேரடியாக அற்புதம் அம்மாளின் கதையோ, பேரரிவாளன், சாந்தன், முருகன் கதையோ அல்ல அந்த சாயலில் உருவாகி இருக்கும் படம். அற்புதம் அம்மாளை மனதில் வைத்துதான் பூர்ணிமா மேடம் கேரக்டரை உருவாக்கி இருக்கிறேன். மகனின் மரண தேதியை அறிந்து துடிக்கும் ஒரு தாயின் போராட்டமாகவும், மனித நாகரீகம் வளர்ந்துவிட்ட காலத்தில் தூக்குத் தண்டனை காட்டுமிராண்டித்தனமானது என்பதை வலியுறுத்தியும் இந்தப் படத்தை எடுத்து வருகிறேன் என்கிறார் இயக்குனர் செந்தில் குமார்.

Scroll to Top