பிரபுதேவா

திரைப்படப்பாடல், திரையுலகம், பாடல்கள்

லவ் பெர்ட்சு – மலர்களே மலர்களே, இது என்ன கனவா…

பெண்:மலர்களே மலர்களே இது என்ன கனவாமலைகளே மலைகளே இது என்ன நினைவாஉருகியதே எனதுள்ளம்… பெருகியதே விழி வெள்ளம் ..விண்ணோடும் நீ தான் , மண்ணோடும் நீ தான்கண்ணோடும் நீ தான், வா…, ஆஆ … பெண்:மேகம் திறந்து கொண்டு மண்ணில் இறங்கி வந்து..மார்பில் ஒளிந்து கொள்ள வா வா.. ஆண்:மார்பில் ஒளிந்து கொண்டால் மாறன் அம்பு வரும்கூந்தலில் ஒளிந்து கொள்ள வரவா .. பெண்: என் கூந்தல் தேவன் தூங்கும் பள்ளி அறையா அறையாமலர் சூடும் வயதில்என்னை மறந்து போவதுதான் முறையா ஆண்:நினைக்காத நேரம் இல்லைகாதல் ரதியே ரதியே ..உன் பேரை சொன்னால் போதும்நின்று வழிவிடும் காதல் நதியே பெண்:என் சுவாசம் உன் மூச்சில் ..உன் வார்த்தை என் பேச்சில்.. ஆண்: ஐந்தாறு நூற்றாண்டு வாழ்வோம் என் வாழ்வே வா.. மலர்களே மலர்களே இது என்ன கனவாமலைகளே மலைகளே இது என்ன நினைவாஉருகியதே எனதுள்ளம்… பெருகியதே விழி வெள்ளம் ..விண்ணோடும் நீ தான் , மண்ணோடும் நீ தான்கண்ணோடும் நீ தான், வா…, ஆஆ … ஆண் : பூவில் நாவிருந்தால் காற்றும் வாய் திறந்தால் ..காதல் காதல் என்று பேசும் .. பெண்: நிலா தமிழறிந்தால்.. அலை மொழி தெரிந்தால்நம் மேல் கவி எழுதி வீசும்… ஆண் : வாழ்வோடு வளர்பிறைதானே வண்ண நிலவே நிலவேவானோடு நீலம் போலே இழைந்து கொண்டது இந்த உறவே.. பெண்: உறங்காத நேரம் கூட உந்தன் கனவே கனவேஉடளோடுஉயிரை போலே உறைந்து போனதுதான் உறவே ஆண் : மறக்காது உன் ராகம், மரிக்காது என் தேகம் பெண்: உனக்காக உயிர் வாழ்வேன்.. வா என் வாழ்வே வா.. மலர்களே மலர்களே இது என்ன கனவாமலைகளே மலைகளே இது என்ன நினைவா ஆண் : உருகியதே எனதுள்ளம்… பெருகியதே விழி வெள்ளம் .. பெண்: விண்ணோடும் நீ தான் , மண்ணோடும் நீ தான் ஆண் : கண்ணோடும் நீ தான், வா…, ஆஆ …

செய்திகள், திரையுலகம்

தமிழ்நாட்டு பையனை மணக்கவிருக்கின்றார் நடிகை நயன்தாரா!…

சென்னை:-தென்னிந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகை என்றால் அது நடிகை நயன்தாரா தான். இவர், நடிகர் சிம்பு மற்றும் இயக்குனர் பிரபுதேவாவுடன் காதலில் விழுந்து பின் அந்த காதல் முறிந்தும் போனது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் நயன்தாராவின் நெருங்கிய தோழியின் மூலம் ஒரு செய்தி கசிந்துள்ளது. அது என்னவென்றால் நயன்தாரா விரைவில் திருமணம் செய்யவிருக்கின்றாராம். அவர் தமிழ் நாட்டை சார்ந்தவர் என்றும் கூறப்படுகிறது. யார் அந்த அதிர்ஷ்டசாலி என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

செய்திகள், திரையுலகம்

இரவு நேரங்களில் சந்திக்கும் பிரபுதேவா – சோனாக்‌ஷி சின்ஹா!…

சென்னை:-தபாங் படத்தின் மூலம் பாலிவுட்டில் காலடி எடுத்து வைத்தவர் நடிகை சோனாக்‌ஷி சின்ஹா. இவர் லிங்கா படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமானவர். பிரபுதேவா பாலிவுட்டில் ஒரு படம் இயக்குகிறார் என்றால் அந்த படத்தில் யார் இருக்கிறார்களோ, இல்லையோ, கண்டிப்பாக சோனாக்‌ஷி இருப்பார். ஏனெனில் இவர்கள் இருவரும் காதலித்து வருவதாக கூறப்படுகிறது. மேலும், இதை இவர்கள் மறுத்தாலும் இரண்டு பேருக்கும் இடையேயான நெருக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறதாம். நள்ளிரவு வேளைகளில் சந்தித்துக் கொள்ளும் இருவரும் அதிகாலை வரை பேசிக்கொண்டிருக்கிறார்களாம்.

செய்திகள், திரையுலகம்

நடிகை நயன்தாரா குறித்து வெளிவந்த உண்மை!…

சென்னை:-தென்னிந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகை என்றால் அது நடிகை நயன்தாரா தான். இவர் சிம்பு மற்றும் பிரபுதேவாவுடன் காதலில் விழுந்து பின் அந்த காதல் முறிந்தும் போனது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் நயன்தாராவின் நெருங்கிய தோழியின் மூலம் ஒரு செய்தி கசிந்துள்ளது. அது என்னவென்றால் நயன்தாரா விரைவில் திருமணம் செய்யவிருக்கின்றாராம். அவர் தமிழ் நாட்டை சார்ந்தவர் என்றும் கூறப்படுகிறது. யார் அந்த அதிர்ஷ்டசாலி என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

செய்திகள், திரையுலகம்

இனி அவருடன் வாழ்க்கையை சீரழிக்க எனக்கு விருப்பம் இல்லை – நயன்தாரா!…

சென்னை:-தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை நயன்தாரா. இவர் சில ஆண்டுகளுக்கு முன் பிரபல டான்ஸ் மாஸ்டர்+நடிகர் பிரபுதேவாவை காதலித்து வந்தார். இந்த காதல் தோல்வியில் முடிய மீண்டும் சினிமாவில் நடிக்க ஆரம்பித்து விட்டார். தற்போது பிரபுதேவா பிரபல தயாரிப்பாளரிடம் தன்னை நயன்தாராவுடன் சேர்த்து வைக்க கோரியதாக கூறப்படுகிறது. அவரும் நயன்தாராவிடம் பேச, அந்த பேச்சுக்கே இடமில்லை, இனியும் என் வாழ்க்கையை சீரழிக்க விரும்பவில்லை என கூறியுள்ளாராம்.

செய்திகள், திரையுலகம்

பிரபுதேவா வருகையால் கவலையில் ஆழ்ந்த நடிகை நயன்தாரா!…

சென்னை:-ஐயா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் குடும்ப பெண்ணாக களம் இறங்கியவர் நடிகை நயன்தாரா. இதை தொடந்து வல்லவன் படத்தின் சிம்புவுடன் நெருக்கமாக நடித்து சர்ச்சையை உண்டாக்கினார். பின் சிம்புவுடன் காதல், மோதல், தோல்வி என கவலையில் இருந்த இவருக்கு, பிரபுதேவாவுடன் நட்பு ஏற்பட்டு மீண்டும் ஒரு காதல் மலர்ந்தது. இந்த காதலும் காலப்போக்கில் தோல்வியடைய, நடிப்பதில் மட்டும் கவனத்தை செலுத்த தொடங்கினார். நீண்ட நாட்களாக பாலிவுட்டில் இருந்த பிரபுதேவா, தற்போது மீண்டும் கோலிவுட்டிற்கு வரவிருக்கிறாராம். இந்த செய்தியை கேட்டதிலிருந்தே நயன்தாரா மிகுந்த கவலையில் இருப்பதாக கூறப்படுகிறது.

செய்திகள், திரையுலகம்

மீண்டும் பிரபுதேவா இயக்கத்தில் நடிக்கும் நடிகர் விஜய்!…

சென்னை:-‘இளைய தளபதி’ நடிகர் விஜய்யின் திரைப்பயணத்தில் போக்கிரி மிக முக்கியமான திரைப்படம். இப்படத்தை பிரபல நடிகர்+நடன இயக்குனர் பிரபுதேவா இயக்கியிருந்தார். இதை தொடர்ந்து இவர்கள் கூட்டணியில் வெளிவந்த வில்லு சரியாக ஓடவில்லை, இதனால், பிரபுதேவா பாலிவுட் பக்கம் திரும்பினார். தற்போது இவர் கமல்ஹாசனுக்காக ஒரு கதையை ரெடி செய்துள்ளார். அவரின் கால்ஷிட் கிடைக்காமல் போனால், கண்டிப்பாக அந்த கதை விஜய்க்கு தான் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

செய்திகள், திரையுலகம்

பிரபுதேவாவுடன் நடிக்க நடிகை நயன்தாரா மறுப்பு?…

சென்னை:-நடிகர் விஜய்யை வைத்து பிரபு தேவா இயக்கிய வில்லு படத்தில் நயன்தாரா நாயகியாக நடித்தார். அப்போது இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டது. காதலித்தனர். திருமணம் செய்து கொள்ளவும் முடிவு செய்தனர். பிரபு தேவாவை மணப்பதற்காகவே நயன்தாரா கிறிஸ்தவ மதத்தில் இருந்து இந்து மதத்துக்கும் மாறினார். சினிமாவுக்கும் முழுக்கு போட்டார். ஆனால் கடைசி நேரத்தில் திருமணம் திடீரென நின்று போனது. இருவரும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தார்கள். தற்போது மீண்டும் நயன்தாரா நடிக்க வந்துள்ளார். தமிழ், மலையாளத்தில் நிறைய படங்கள் கைவசம் வைத்து நடித்து வருகிறார். பிரபு தேவா இந்தியில் படங்கள் இயக்கி வருகிறார். இருவரும் நேரில் சந்திப்பதை கூட தவிர்த்து வருகிறார்கள். காதலித்த போது பட விழாக்களில் ஜோடியாக பங்கேற்றனர். இப்போது ஒருவர் பங்கேற்கும் விழாவுக்கு மற்றவர் போவது இல்லை. இந்நிலையில் பிரபு தேவா, நயன்தாராவை ஜோடியாக நடிக்க வைத்து தமிழ், தெலுங்கில் படம் எடுக்க தயாரிப்பாளர் ஒருவர் விரும்பினார். ஏற்கனவே காதலை முறித்துக் கொண்ட சிம்புவுடன் இது நம்ம ஆளு படத்தில் நடிப்பதால் பிரபு தேவாவுடனும் நடிக்க சம்மதம் சொல்வார் என்று அந்த தயாரிப்பாளர் எதிர்பார்த்தார். நயன்தாராவை அணுகி கால்சீட் கேட்ட போது பிரபு தேவாவுடன் ஒரு போதும் நடிக்க மாட்டேன் என்று பிடிவாதமாக மறுத்து விட்டாராம்.

செய்திகள், திரையுலகம்

திருமணம் குறித்து நடிகை நயன்தாரா அதிரடி முடிவு!…

சென்னை:-தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. இவர் தற்போது நண்பேண்டா, நானும் ரவுடி தான், மாஸ் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இவர் ஏற்கனவே சிம்பு, பிரபுதேவாவை காதலித்து தோல்வியடைந்தவர். இதன் பிறகு மீண்டும் சிம்புவுடன் காதல் என்று ஒரு வதந்தி பரவியது. ஆனால், அதெல்லாம் இல்லையாம் இனி சினிமாகாரர்கள் யாரையும் காதலிப்பதாக இல்லை, நல்ல வரன் வெளியில் அமைந்தால் செட்டில் ஆவது தான் இவரின் ப்ளானாம்.

செய்திகள், திரையுலகம்

பெற்றோர் பார்க்கும் மாப்பிள்ளையை மணப்பேன் – நயன்தாரா!…

சென்னை:-நடிகை நயன்தாரா ஏற்கனவே சிம்புவை காதலித்தார். பிறகு அது தோல்வியில் முடிந்தது. கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர். இரண்டாவதாக பிரபு தேவாவை விரும்பினார். அவருக்காக கிறிஸ்தவ மதத்தில் இருந்து இந்து மதத்துக்கும் மாறினார். திருமண ஏற்பாடுகளும் நடந்தது. ஆனால் அதுவும் கடைசி நேரத்தில் தோல்வியானது. இருவரும் பிரிந்து விட்டார்கள். தற்போது நயன்தாரா மீண்டும் சினிமாவில் தீவிரமாக நடித்து வருகிறார். நயன்தாரா கைவசம் ‘இது நம்ம ஆளு’, ‘மாயா’, ‘தனிஒருவன்’, ‘மாஸ்’, ‘நானும் ரவுடி தான்’ என ஐந்து படங்கள் உள்ளன. மலையாள படமொன்றிலும் நடிக்கிறார். நயன்தாராவுக்கு 30 வயது ஆகிறது. எனவே அவரது திருமணம் எப்போது நடக்கும் என்ற பரபரப்பான எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்நிலையில் திருமணம் குறித்து அவர் கருத்து தெரிவித்து இருக்கிறார். அவர் கூறியதாவது:– என் பெற்றோர் என்னை நன்றாக புரிந்து வைத்து இருக்கிறார்கள். என் உணர்வுகள் பற்றியும் விருப்பங்கள் பற்றியும் அவர்களுக்கு தான் அதிகம் தெரியும். அவர்களை நான் நம்புகிறேன். எனக்கு பொருத்தமான மாப்பிள்ளையையும் அவர்களே தேர்வு செய்வார்கள். நல்ல மாப்பிள்ளை வேண்டும். அந்த பொறுப்பை பெற்றோரிடமே விட்டு விட்டேன். அவர்கள் முடிவு செய்யும் மாப்பிள்ளையை திருமணம் செய்து கொள்வேன். இவ்வாறு நயன்தாரா கூறினார்.

Scroll to Top