சென்னை

செய்திகள், திரையுலகம்

அஜித், விஜய் பற்றி வெளிவந்த அதிர்ச்சி தகவல்!…

சென்னை:-ரஜினி, கமல் இவர்களுக்கு பிறகு தமிழ் சினிமாவில் அதிக ரசிகர்கள் பலம் கொண்டவர்கள் விஜய், அஜித் தான். சமீபத்தில் பிரபல தொலைக்காட்சி நடத்திய விருது விழா தற்போது சமூக வலைத்தளங்களில் கேலி கூத்தாக மாறியுள்ளது. இது குறித்து சமீபத்தில் வந்த தகவல் ஒன்று பெரும் அதிர்ச்சியை கிளப்பியுள்ளது. Favorite பிரிவில் பெரும்பாலும் அஜித் அல்லது விஜய் தான் வெற்றி பெறுவார்கள் என்று நினைத்து வந்த நிலையில், ரஜினிக்கு கிடைத்தது இரண்டு தரப்பு ரசிகர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. ஆனால், முதலில் இந்த பட்டியலில் விஜய், அஜித் பெயர் தான் முன்னணியில் இருந்ததாம், ஆனால், அஜித் எந்த விழாவிற்கும் வரமாட்டர் என்று அனைவருக்கும் தெரியும், அதேபோல் விஜய்யும் வரமறுக்க அதனால் தான் விருது மாற்றி கொடுக்கப்பட்டுள்ளது என கிசுகிசுக்கப்படுகிறது. இதில் காமெடி என்னவென்றால் ரஜினியும் விருது வாங்க வரவில்லை.

செய்திகள், முதன்மை செய்திகள், விளையாட்டு

கைவிரலில் காயம்: 2 போட்டிகளில் அஸ்வின் ஆடமாட்டார்!…

சென்னை:-கொல்கத்தாவுக்கு எதிரான நேற்றைய போட்டியில் சென்னை அணியின் வீரர் அஸ்வின் பந்துவீச்சு அபாரமாக இருந்தது. அவர் 2 ஓவர் வீசி 5 ரன் கொடுத்து 2 முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றினார். அவரது பந்துவீச்சில் ராபின் உத்தப்பா, மணிஷ் பாண்டே ஆட்டம் இழந்தனர். இதில் ராபின் உத்தப்பா சிறப்பாக ஆடி கொண்டிருந்தார். 12–வது ஓவரில் பீல்டிங்கின் போது அஸ்வின் காயம் அடைந்தார். சூர்யகுமார் யாதவ் அடித்த பந்தை அவர் கேட்ச் பிடிக்க முயன்றபோது வலது கைவிரலில் காயம் ஏற்பட்டது. அந்த கேட்ச்சை அவர் தவறவிட்டார். இதையடுத்து அவர் மைதானத்தில் இருந்து வெளியேறினார். அதன்பின் அவர் பந்துவீச வரவில்லை. அவருக்கு கைவிரலில் ஸ்கேன் செய்து பார்க்கப்படுகிறது. இதையடுத்து அவருக்கு ஓய்வு அளிக்க அணி நிர்வாகம் முடிவு செய்து இருப்பதால் அடுத்த 2 ஆட்டங்களில் அவர் விளையாடமாட்டார் என்று தெரிகிறது.

செய்திகள், திரையுலகம்

‘புலி’ படத்தில் இணைந்த மற்றொரு பிரபல நடிகை!…

சென்னை:-‘புலி’ படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன், ஹன்சிகா நடித்து வருவது அனைவரும் அறிந்ததே. இது மட்டுமின்றி நடிகை ஸ்ரீதேவி இப்படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது வந்த தகவலின் படி இப்படத்தில் மேலும் ஒரு பிரபல நடிகை இணைந்துள்ளாராம். அவர் வேறு யாரும் இல்லை அட்டக்கத்தி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான நந்திதா தான். மேலும், இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவுப்பு ஏதும் வரவில்லை, விரைவில் படக்குழுவே இதை அறிவிப்பார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

செய்திகள், திரையுலகம்

வேறு பேச்சுக்கே இடமில்லை நடிகர் விஜய் தான்? – ஐஸ்வர்யா!…

சென்னை:-‘அட்டக்கத்தி’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை ஐஸ்வர்யா. இதை தொடர்ந்து ரம்மி, பண்ணையாரும் பத்மினியும், திருடன் போலிஸ் ஆகிய திரைப்படங்களில் நடித்தார். இவரிடம் தமிழ் சினிமாவில் நன்றாக நடனமாடும் நடிகர் யார் என்று ஒரு பேட்டியில் கேட்டுள்ளனர். இதில் இவர், வேறு பேச்சுக்கே இடமில்லை நடிகர் விஜய் தான் செம்ம டான்ஸர் என்று கூறியுள்ளார். மேலும், நடிகர் தனுஷின் நடனமும் தனக்கு மிகவும் பிடித்ததாக தெரிவித்துள்ளார்.

செய்திகள், திரையுலகம்

பூகம்பத்தில் சிக்கிய நடிகர் தனுஷ், எமி ஜாக்ஸன்!…

சென்னை:-நடிகர் தனுஷ் தற்போது வேல்ராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக எமி ஜாக்ஸன் நடிக்கிறார் என்பது அனைவரும் அறிந்தே. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது டார்ஜிலிங் பகுதியில் நடந்து வருகிறது. நேற்று படப்பிடிப்பு முடிந்து படக்குழுவினர்கள் ஹோட்டலுக்கு செல்லுகையில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இதனால், அங்கிருந்து அலறி அடித்து கொண்டு ஓடி வந்துள்ளனர். இன்று இரவே படக்குழுவினர்கள் அவசர அவசரமாக சென்னை வரவிருப்பதாக கூறப்படுகிறது. இச்செய்தியை கேட்ட திரையுலகத்தினர் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

செய்திகள், திரையுலகம்

வேகமாகப் பரவும் நடிகை ராதிகா ஆப்தேவின் நியூட் வீடியோ!…

சென்னை:-தோனி, அழகுராஜா, வெற்றிச் செல்வன் ஆகிய படங்களில் நாயகியாக நடித்தவர் நடிகை ராதிகா ஆப்தே. சமீப காலமாக செய்திகளில் அதிகமாகவே அடிபட்டு வருகிறார். சில வெளிப்படையான கமெண்ட்டுகளால் செய்திகளில் அதிகம் இடம் பெற்றார். திருமணத்திற்கு முந்தைய உறவு பற்றி அவர் பேசிய பேச்சுகள் பரபரப்பாக பேசப்பட்டன. இப்போது வேறு ஒரு விஷயத்திற்காக ராதிகா ஆப்தே மீண்டும் செய்திகளில் இடம் பெற்று வருகிறார். பிரபல ஹிந்தித் திரைப்பட இயக்குனரான அனுராக் காஷ்யப் இயக்கிய ‘பார்செட்’ என்ற ஆங்கில குறும்படத்தில் சில வினாடிகளே வரும் ஒரு காட்சியில் ராதிகா ஆப்தே நியூட் ஆக நடித்திருக்கிறார். அந்தக் காட்சி தற்போது இணையங்களில் அதிகமாகப் பரவி வருகிறது. இது குறித்து அனுராக் காஷ்யப் மிகவும் வருத்தமடைந்துள்ளார். அது பற்றி அவர் கூறியிருப்பதாவது, சர்வதேச ரசிகர்களுக்காக ஒரு உண்மைக் கதையை அடிப்படையாக வைத்து ஒரு முக்கியமான கருத்துடன் 20 நிமிடம் ஓடக் கூடிய குறும்படம் அது. அந்தப் படத்தில் சில வினாடிகளே வரும் ஒரு காட்சியில் தன்னுடைய ஆடையைத் தூக்கி, ஒரு சிறிய நிர்வாணக் காட்சி ஒன்றில் ராதிகா நடித்திருப்பார். ஒரு நடிகை இம்மாதிரியான காட்சியில் நடிப்பதற்கு மிகவும் தைரியம் வேண்டும். அந்தக் காட்சியை முற்றிலும் பெண்களை வைத்துத்தான் படமாக்கினேன், போஸ்ட் புரொடக்ஷனிலும் பெண்கள் மட்டுமே பங்கு பெற்றனர். அவ்வளவு கவனமாக அந்தக் காட்சியைப் படமாக்கினேன். ஒரு மாதத்திற்கு முன்னதாக அந்தக் குறும்படம் நியூயார்க்குக்கு அனுப்பப்பட்டது. இப்போது அந்த வீடியோ பரவி வருவது அதிர்ச்சியாக உள்ளது, என அவர் தெரிவித்துள்ளார்.

செய்திகள், திரையுலகம்

நடிகை ஆண்ட்ரியாவை சமாதானப்படுத்திய கமல்ஹாசன்!…

சென்னை:-உத்தமவில்லன் படத்தின் விளம்பரங்களை உன்னிப்பாகக் கவனித்தவர்களுக்கு ஒரு விஷயம் பளிச்சென புரியும். அப்படத்தின் அனைத்து விளம்பரங்களிலும் கமல்ஹாசனே நிறைந்திருக்கிறார். உத்தமவில்லன் படத்தின் விளம்பரங்கள் அனைத்தும் கமலின் ஒப்புதல் பெற்ற பிறகே வெளிவருவதால், அவரது முகத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. கமலுக்கு அடுத்தபடியாக உத்தமவில்லன் விளம்பரங்களில் இடம் பெற்றிருப்பது பூஜா குமார்தான். உத்தமவில்லன் படத்தின் இன்னொரு நாயகியான ஆண்ட்ரியாவை பப்ளிசிட்டியில் ஒட்டுமொத்தமாகவே ஓரங்கட்டிவிட்டனர். தன்னை ஓரங்கட்டியதால் மனசுக்குள் கருவிக்கொண்டிருந்தார் ஆண்டரியா. அதற்கு தக்க பதிலடி கொடுக்க சமயம் பார்த்து காத்திருந்தார். உத்தமவில்லன் மே 1 அன்று ரிலீஸ் ஆவதால் படத்தின் புரமோஷனுக்காக டிவி சேனல்களுக்கு பேட்டி கொடுக்க அழைத்தனர். ஆண்ட்ரியா வர முடியாது என்று திட்டவட்டமாக சொல்லிவிட்டார். இந்த விஷயத்தை கமலிடம் சொல்வோம் என்றெல்லாம் அன்பாக சொல்லியும்….யார்கிட்ட வேணாலும் சொல்லிக்கோங்க… ஸாரி என்று கடுப்படித்திருக்கிறார். கடைசியில் கமலே ஆண்ட்ரியாவிடம் பேசி, அவரை கன்வின்ஸ் செய்து டிவிக்கு பேட்டி கொடுக்க சொல்லி இருக்கிறாராம்.

செய்திகள், திரையுலகம்

சிவகார்த்திகேயனுடன் இயக்குனர் சமுத்திரக்கனி மோதல்!…

சென்னை:-தமிழ் சினிமாவிற்கு பல புரட்சிகரமான கருத்தை தன் படங்களில் கூறியவர் இயக்குனர் சமுத்திரக்கனி. இவர் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவரவிருக்கும் ரஜினிமுருகன் திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில் இவருக்கு வில்லன் கதாபாத்திரமாம், வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் எப்படி சத்யராஜுக்கு ஒரு அழுத்தமான கதாபாத்திரம் கிடைத்ததோ, அதேபோல் இந்த படத்தில் சமுத்திரக்கனிக்கும் நல்ல கதாபாத்திரமாம். இப்படத்தில் வழக்கம் போல் கனியை, சிவகார்த்திகேயன் வம்பு செய்து கலாட்டா செய்வது போல் தான் இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

செய்திகள், திரையுலகம்

நடிகர் விஜய் ரசிகர்களை உச்சக்கட்ட கோபத்திற்கு ஆளாக்கிய சிம்பு!…

சென்னை:-நடிகர் சிம்பு எப்போதும் தன் டுவிட்டர் பக்கத்தில் ஏதேனும் கருத்துக்களை தெரிவித்து கொண்டிருப்பார். அந்த வகையில் நேற்று இவர் செய்த டுவிட் ஒன்று பெரும் சர்ச்சையை கிளப்பியது. பாலிவுட் இணையத்தளம் ஒன்று தென்னிந்தியாவின் சூப்பர் ஸ்டார் யார் என்று ஒரு போட்டி நடத்தியது. இதில் இறுதியில் நடிகர் அஜித் தான் வென்றார். தற்போது சிம்பு, ‘அஜித்திற்கு நானும் வாக்களித்தேன்’ என்று கூற, ஒரு சினிமா பிரபலமாக இருந்து கொண்டு எப்படி இவர் வெளிப்படையாக இப்படி கூறலாம் என விஜய் ரசிகர்கள் வழக்கம் போல் இவரை திட்டி வருகின்றனர்.

செய்திகள், திரையுலகம்

வதந்திக்கு விடை கொடுத்த நடிகர் அஜித் தரப்பு!…

சென்னை:-நடிகர் அஜித் என்ன செய்தாலும் சமூக வலைத்தளங்களில் Trend தான் போல, அந்த வகையில் இன்று நடிகர் அஜித் BMW கார் வாங்கியிருக்கிறார், என சில புகைப்படங்கள் வைரலாக பரவி வந்தது. இது மூன்றரை கோடி ரூபாய் மதிப்பிலான BMW ஹைபிரிட் ஐ8 ரக ஸ்போர்ட்ஸ் கார். இந்தியாவிலேயே மிக குறைந்த பிரபலங்களே இதை வாங்கியுள்ளனர். ஆனால், இது குறித்து அஜித் தரப்பிடம் கேட்ட போது, இது அஜித்தின் கார் இல்லை, அப்படி எதையும் அவர் வாங்கவும் இல்லை என கூறியுள்ளனர்.

Scroll to Top