- நிலந்தரு திருவின் பாண்டியன் அவையத்து-தொல்காப்பியம்-பாயிரம்.
- தொல்லாணை நல்லாசிரியர் புணர்க் கூட்டு உண்ட புகழ்சால் சிறப்பின் நிலந்தரு தருவின் நெடியோன்-மதுரைக்காஞ்சி.
- தமிழ்நிலைபெற்ற தாங்கரு மரபின் மகிழ் நனைமறுவின் மதுரை-சிறுபாணாற்றுப்படை.
- இமிழ்குரல் முரசம் மூனறுடன் ஆளும் தமிழ்கெழு கூடல் தண்கோல் வேந்தே-புறநானூறு.
- ஓங்கிய சிறப்பின் உயர்ந்த கேள்வி மாங்குடி மருதன் தலைவனாக உலகமொடு நிலைஇய பலர்புகழ் சிறப்பின் புலவர் பாடாது வரைக என்நிலவரை-புறநானூறு.
- பஃறுளி ஆற்றுடன் பன்மலை அடுக்கத்துக் குமரிக் கோடும் கொடுங்கடல் கொள்ள -சிலப்பதிகாரம்
- புலவர் செந்நாப் பொருந்திய நிவப்பிற் பொதியில் தென்றல் போலாது, ஈங்கு மதுரைத் தென்றல் வந்தது காணீர் -சிலப்பதிகாரம்.
- தென் தமிழ் நன்நாட்டுத் தீதுதீர் மதுரை -சிலப்பதிகாரம்.
- தென் தமிழ் மதுரை -மணிமேகலை.
- நிலநாவில் திரிதரூஉம் நீண்டமாடக் கூடலார் புலன் நாவில் பிறந்த சொல் புதிது உண்ணும் பொழுதன்றோ -கலித்தொகை.
- செதுமொழி சீத்த செவி செறுவாக, முதுமொழி நீராப், புலன் நா உழவர் புதுமொழி கூட்டுண்ணும் புரிசைசூழ் மதுரை-கலித்தொகை
- ஈண்டு நலந்தருதல் வேண்டிப் பாண்டியன் பாடு தமிழ் வளர்த்த கூடல் -புறத்திரட்டு-ஆசிரியமாலை
- உறைவான் உயர்மதிற் கூடலில் ஆய்ந்த ஒண் தமிழன் துறைவாய் நுழைந்தனையோ -திருவாசகம் .
சங்கம் இருந்ததற்கான அகச்சான்றுகள்
Categories: