திரையுலகம்,பரபரப்பு செய்திகள் சென்னையில் பதற்றம்-ரஜினி அதிர்ச்சி

சென்னையில் பதற்றம்-ரஜினி அதிர்ச்சி

சென்னையில் பதற்றம்-ரஜினி அதிர்ச்சி post thumbnail image

ஜெயலலிதா – ரஜினிகாந்த் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதா மற்றும் ரஜினிகாந்த் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுவிக்கப்பட்டது. இது தொடர்பாக கோவையை சேர்ந்த வாலிபர் ஒருவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.

கோவை வாலிபரிடம் விசாரணை:

சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று மாலை 6 மணி அளவில் மர்ம நபர் ஒருவர் போனில் பேசினார் . சென்னை போயஸ் கார்டனில் உள்ள மறைந்த முதல் அமைச்சர் ஜெயலலிதா மற்றும் நடிகர் ரஜினி காந்த் வீட்டிலும் வெடுகுண்டு வெடிக்கப்போகிறது என்று கூறி இணைப்பை துண்டித்து விட்டார் .

உடனடியாக சோதனை செய்ததில் வெடிகுண்டு ஏதும் சிக்கவில்லை . இது தொடர்பாக தேனாம்பேட்டை போலீசார் நடத்திய விசாரணையில் , அந்த மர்ம நபர் கோவையைச் சார்ந்தவர் என்றும் அவருடைய பெயர் முகமது அலி என்பது தெரியவந்துள்ளது.அவர் மன‍அழுத்தம் காரணமாக இவ்வாறு மிரட்டல் விடுத்ததாக தெரியவந்தது. மேலும் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி