பரபரப்பு செய்திகள்,விளையாட்டு பெண்கள் பந்து வீச்சில் கோஸ்வாமி முதலிடம்

பெண்கள் பந்து வீச்சில் கோஸ்வாமி முதலிடம்

பெண்கள் பந்து வீச்சில் கோஸ்வாமி முதலிடம் post thumbnail image

பெண்களுக்கான ஒரு நாள் பேட்டிங் தரவரிசையில் இந்திய நட்சத்திர வீராங்கனை மந்தனா (797 புள்ளி )முதலிடத்தில் நீடிக்கிறார். ஆஸ்திரேலியாவின் எலிஸ் பெர்ரி (756 புள்ளி) 2-வது இடத்திலும் நியூசிலாந்தின் சட்டர்த்வெய்ட் (755 புள்ளி )3-வது இடத்திலும், இந்திய கேப்டன் மிதாலி ராஜ் (713 புள்ளி )4-வது இடத்திலும் உள்ளனர்.பந்து வீச்சாளர்களின் தரவரிசையில் இந்திய மூத்த வீராங்கனை ஜூலன் கோஸ்வாமி 2 இடங்கள் அதிகரித்து 730 புள்ளிகளுடன் மறுபடியும் நம்பர் ஒன் அரியணையில் ஏறியுள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடரில் 8 விக்கெட்டுகள் வீழ்த்தியதன் மூலம் இந்த ஏற்றம் கிடைத்துள்ளது. ஆஸ்திரேலியாவின் ஜெஸ் ஜோனசென் (723 புள்ளி ) 2-வது இடத்திலும் , பாகிஸ்தானின் சனா மிர் 3-வது இடத்திலும் (718 புள்ளி) உள்ளனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி