சென்னை மாநகராட்சியில் உள்ள மசாஜ் சென்டர்களை முறைப்படுத்தும் நோக்கில் புதிய விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.
தஞ்சை மாநகரில் 14 இடங்களில் ரூ. 2.58 கோடி மதிப்பில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் மக்கும், மக்காத குப்பைகளை தரம் பிரித்து சுகாதாரம் பாதுகாத்தல் பணி விரைவில் துவங்கவுள்ளது.
அம்மா உணவகங்களில் கட்டுமானத் தொழிலாளர்களுக்கு விலையில்லா உணவு வழங்கும் திட்டத்தை , முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைத்தார்.
தி.மு.க கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தி.மு.க தொகுதிப்பங்கீட்டு குழுவுடன் இந்திய கம்யூனிஸ்ட் நடத்திய பேச்சு வார்த்தையில் 2 தொகுதிகள் வழங்குவது என உடன்பாடு செய்யப்பட்டது.
சேலம், கோவை, ஈரோடு, திருப்பூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, கரூர், திண்டுக்கல், நாமக்கல், வேலூர், திருவண்ணாமலை, உள்ளிட்ட மாவட்டங்களில் வரும் 6 மற்றும் 7ஆம் தேதிகளில் அனல் காற்று வீசும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.