அரசியல்,பரபரப்பு செய்திகள்,முதன்மை செய்திகள் ஈஷா யோகா மையமும் ஜனாதிபதியும்!

ஈஷா யோகா மையமும் ஜனாதிபதியும்!

ஈஷா யோகா மையமும் ஜனாதிபதியும்! post thumbnail image

கோவையில் நடக்கும் இந்த ஆண்டு மஹா சிவராத்திரி விழாவில் சிறப்பு விருந்தினராக ஜனாதிபதி ராம் நாத் கலந்து கொள்கிறார் . மார்ச்-4 ஆன இன்று மிகவும் கோலாகலமாக ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடப்படுகிறது.

வெள்ளையங்கிரி மலை அடிவாரத்தில் ஈஷா யோகா மையத்தில் லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு ஈசனின் அருளை பெறுவார்கள். இத்தினத்தில் மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை இசைக்கச்சேரி, நள்ளிரவு யோகா, பாரம்பரிய கலாச்சாரத்தை நிலைநாட்டும் வகையில் இசை மற்றும் நாட்டிய நிகழ்ச்சி நடைப்பெற்று வருகிறது.

இந்த விழா ஈஷா யோகா மையத்தில் அமைக்கப்பட்டுள்ள 112 அடி உயர ஆதி யோகி சிலை மைதானத்தில் நடப்பது வழக்கம். இந்தாண்டு சிவராத்திரி நகழ்ச்சியில் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் கச்சேரி செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விழாவில் தமிழகம் மட்டுமல்லாமல் உலகின் பல நாடுகளிலிருந்து லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொள்வர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி