முதன்மை செய்திகள் தேர்வுக்கால ஆலோசனைகள்!

தேர்வுக்கால ஆலோசனைகள்!

தேர்வுக்கால ஆலோசனைகள்! post thumbnail image
  • தேர்வுக்காலம் துவங்கிவிட்டது .பொதுத்தேர்வை சந்திக்கும் மாணவர்கள்,அதிக மதிப்பெண்களுடன் தேர்வில் வெற்றிபெற இனிய தமிழின் வாழ்த்துக்கள்
  • 12ம் மாணவர்களுக்கு,அவர்களது எதிர்காலத்தை நிர்ணயிக்கப்போகும் இந்த பொதுத்தேர்வினை தைரியமாக தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்ள மாணவர்கள் உண்ணக்கூடிய உண்ணக்கூடாத உணவுகள் என்னென்ன?என்று பார்க்கலாம்.
  • குறைவான தூக்கம் கூடுதலான மன இறுக்கம் இவை உடலில் செரிமானத்தன்மையை பாதிக்கிறது.எனவே இதுபோன்ற வேளைகளில் கடினமான உணவுகளை எடுத்துக்கொள்ளக்கூடாது.அதிக உணவை கடின உணவை உண்ணும்போது வயிற்றுக்கு அதிக இரத்தம் பாய்வதால் மூளையின் செயல்திறன் பாதிப்படைகிறது.

உண்ணக்கூடாதது:

எண்ணெய் பதார்த்தங்களை தொடக்கூடாது.காரம்,மசாலாக்கள் அதிகமான உணவுகளில் கை வைக்கக்கூடாது. குறிப்பாக நிலக்கடலை உண்பதை தவிர்க்கவேண்டும்.அதிக தாகத்தை உருவாக்கும் இட்லி,தோசைகளை குறைத்துக்கொள்ளவேண்டும்.அதிக புளிப்பு உள்ள தயிர் தவிர்க்கப்படவேண்டும்.

எடுத்துக்கொள்ள வேண்டியவை:

காலையில் சாத்துக்குடி,ஆரஞ்சு,திராட்சை,தர்பூசணிஇவற்றின் சாறுகளில் தேன் கலந்து குடிக்கலாம்.அதன்பின்சத்துமாவு,கஞ்சி,ஓட்ஸ், கம்பு,ராகி,கோதுமை,அரிசி இவற்றில் ஏதாவது ஒன்றின் கஞ்சியை அருந்தலாம்.மதியம் பருப்பு, கீரை இவற்றைவேகவைத்துகடைந்து சாதத்துடன் சேர்த்து உண்ணலாம்.

இரவுவேளை வாழைப்பழம்,பப்பாளி,ஆப்பிள்பழங்களின் கலவையை உண்ணலாம்.படிக்கும் வேளைகளில் தேவைப்பட்டால் உலர் திராட்சை,பேரீட்சம்பழம்,பாதாம் பருப்புஉண்ணலாம்.அதே வேளையில் மூளைக்கு வேண்டிய சத்துக்களைக்கொடுக்கும்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி