சென்னையிலிருந்து நீலகிரி மாவட்டத்தில் உள்ள மசினகுடி வனப்பகுதிக்கு சுற்றுலா சென்று காணாமல் போன 7 பேரில் 5 பேர் பலியாகினர் ,இருவர் உயிருடன் உள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் மிகவும் ஆபத்தான வனப்பகுதி மசினகுடி . விலங்குகள் சர்வசாதாரணமாக நடமாடும் ஒரு வனப்பகுதியாகும். இங்கு வனத்துறையினரின் அனுமதியில்லாமல் சுற்றுலா பயணிகள் நுழைய கூடாது. சென்னையைச் சேர்ந்தவர்கள் ராமஜோஸ், ரவிவர்மா, இப்ராஹிம், ஜெயக்குமார், அருண், அகர்வால், ஜூடி. நண்பர்களான இவர்கள் 7 பேரும் இந்த வனப்பகுதிக்கு சுற்றுலா சென்றனர்.
மசினகுடி சென்ற இவர்கள், இரண்டு நாட்கள் முன்பு காணாமல் போயினர்.குடுபத்தினரும் தொடர்புகொள்ள முடியாமல் தவித்தனர்.இதையடுத்து காவல்துறை புகாரளிக்கபட்டது.காவல்துறையினர் வனைத்துறை உதவியுடன் தேடுதல் வேட்டையை துவங்கினர்.அப்போது கல்லடை மலை பகுதியில் 32-ஆவது கொண்டை ஊசி வளைவு அருகே 7 பேரும் சென்ற இன்னோவா கார் விபத்துக்குள்ளானது தெரிய வந்தது. இதையடுத்து மீட்பு குழுவினர் அந்த கார் விழுந்த பள்ளத்துக்கு சென்றனர்.
அங்கு இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மீதமுள்ள 5 பேர் பலியாகிவிட்டனர் . இந்த விபத்து கடந்த 1-ஆம் தேதி நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி