சென்னையில் காந்தி ஜெயந்தி விழாவில் பங்கெடுத்த துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் செய்தியாளர்களை சந்தித்தார். விழாவில் காந்தியின் அருமைகள், வரலாறு குறித்து பேசப்பட்டது.
துணை முதல்வர் பன்னீர் செல்வம் பேசுகையில் “தமிழக மக்களுக்கு எதிரான திட்டத்தை அரசு அனுமதிக்காது. ஹைட்ரோ கார்பன் திட்டம் குறித்து இப்போதுதான் அறிவிப்பு வெளியாகி உள்ளது. அரசு ஆலோசனை நடத்தி வருகிறது. திட்டத்திற்கு எதிராக அரசு நீதிமன்றம் வழியாக போராடும். மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவது உறுதி. பணிகள் நடந்து வருகிறது. மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளிக்க வேண்டும். மதுரையில் கண்டிப்பாக எய்ம்ஸ் அமையும். சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் சிறப்பாக செயல்படுகிறார்.பணிகளை சிறப்பாக செய்து வருகிறார். தமிழகத்தில் நக்சலைட் நடமாட்டம் எதுவும் இல்லை. நக்சலைட் இருப்பதாக பொன் ராதா கிருஷ்ணன் கூறியது தவறானது. அதுகுறித்து அரசு ஆலோசனை நடத்தும்.கருணாஸ் பேசியது தவறானது. அதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கருணாஸின் தவறான கொள்கைகளுக்கு உறுதுணையாக இருப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அரசு இதில் கண்டிப்புடன் செயல்படும்” என்று துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கூறினார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி