புதுச்சேரியில் உள்ளாட்சித் துறை சார்பில் விழா நடைபெற்றது. அந்த கூட்டத்தில் துணை நிலை ஆளுநர் கிரண்பேடி, அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் என கலந்து கொண்டனர்.அப்போது விழாவில் பேசிய அதிமுக எம்எல்ஏ அன்பழகன் ” அப்போது அரசின் திட்டங்கள் முறையாக நிறைவேற்றப்படவில்லை. திறந்தவெளி கழிவறை இல்லாத மாநிலமாக புதுச்சேரியை அறிவிக்க ஆளுநர் யார்.புதுச்சேரியில் பல இடங்களில் கழிவறையே இல்லை “என குற்றம்சாட்டினார்.இதைக்கேட்டு டென்ஷன் ஆன கிரண்பேடி,அன்பழகனின் பேச்சை நிறுத்துமாறு கூறினார்.
எனினும் அவர் தொடர்ந்து பேசிகொண்டே இருந்தார்.ஏழுந்து சென்ற கிரண்பேடி , மைக்கை நிறுத்துமாறு கூறினார் .மைக்கும் ஆப் செய்யப்பட்டது.இதையடுத்து இருவருக்கும் மேடையிலேயே வாக்குவாதம் ஏற்பட்டது. யூ கோ என இருவரும் கத்தினார்.அன்பழகன் ஒருமையில் பேச ஆரம்பித்தார்.இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.இதுகுறித்து கிரண்பேடி கூறுகையில் “நேரத்தை விரயமாக்கும் விதமாக எம்எல்ஏ அன்பழகன் பேசிக் கொண்டிருந்தார் .அதனால்,மைக்கை ஆப் செய்ய கூறினேன். பலமுறை எச்சரிக்கை விடுத்தும் அவர் பேச்சை நிறுத்தவில்லை.
Here is the video of #KiranBedi & #AIADMK MLA Anbazhagan engaged in a verbal spat at a public event in #Puducherry pic.twitter.com/SBh3oVXwfB
— Shabbir Ahmed (@Ahmedshabbir20) October 2, 2018
இதுகுறித்துஅன்பழகன் பேசுகையில் “மைக்கை ஆப் செய்ய சொல்ல ஆளுநர் கிரண்பேடிக்கு அதிகாரம் கொடுத்தது யார். ஒரு பொது மேடையில் அநாகரிகத்துடன் நடந்து கொள்ளலாமா” என்று அன்பழகன் கூறினார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி