விஜய் சேதுபதி ,த்ரிஷா நடித்திருக்கும் படம் ’96’. மெட்ராஸ் என்டர்பிரைசஸ் சார்பில் எஸ்.நந்தகோபால் தயாரித்துள்ள இந்தப் படத்தை, சி.பிரேம் குமார் இயக்கியுள்ளார். இப்படத்தில் டிராவல் போட்டோகிராஃபராக விஜய் சேதுபதி நடித்துள்ளார். கும்பகோணம் உள்ளிட்ட பகுதிகளில் படப்பிடிப்பு நடந்தது.

கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் மிகப்பெரிய அளவில் ஹிட்டாகியுள்ளது .வெகு நாட்கள் கழித்து ஒரு பீல் குட் படத்திற்கு மக்கள் எதிர்பாத்து காத்துள்ளனர்.இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதனிடையில்,இப்படத்தினை தெலுங்கில் ரீமேக் செய்ய போட்டி நிலவுகிறது.படத்தின் ரீமேக் உரிமையை பிரபல தயாரிப்பாளர் ஒருவர் வாங்கியுள்ளதாகவும், நானி ,சமந்தா நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்றுவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி