Realme 2 Pro மற்றும் Realme C1
Qualcomm Snapdragon 660 புராஸசர் இதில் இருக்கிறது.ஒப்போவின் F9 சீரிஸ் ஸ்மார்ட்போன்களில் இருந்தது போன்று ரியல்மீ 2 புரோ ஸ்மார்ட்போனில் Dewdrop விஷயத்தை அறிமுகம் செய்திருக்கிறது. அதன் விலையை விட கிட்டத்தட்ட 10,000 ரூபாய் குறைவான ரியல்மீ 2 புரோவில் இதைக் கொடுத்திருக்கிறது ரியல்மீ. 6.3 இன்ச் டிஸ்ப்ளே இந்த விலையில் வேறு ஸ்மார்ட்போன்களில் கிடையாது. தொடக்கம் முதலே ஸ்மார்ட்போன்களில் லுக்கில் கவனம் செலுத்தி வருகிறது ரியல்மீ.
16 MP + 2 MP கேமரா கொடுக்கப்பட்டிருக்கிறது.3500 mAh பேட்டரி இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது. AI தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கிறது ரியல்மீ. Realme 2 Pro ஸ்மார்ட்போன் மூன்று வகைகளில் விற்பனைக்கு வருகிறது. 4GB RAM + 64GB 13,990 ரூபாய், 6GB RAM + 64GB 15,990 ரூபாய் மற்றும் 8GB RAM + 128GB 17,990 ரூபாய்.
Realme C1 ஸ்மார்ட்போன். 13 MP + 2 MP கேமராவும், முன்புறமாக 5 MP கேமராவும் இருக்கிறது. Qualcomm Snapdragon 450 புராஸசர் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது. 4230 mAh பேட்டரி நிச்சயமாக ஒரு நாளை தாண்டியும் தாக்குப்பிடிக்கும். ரியல்மீ 1 போல, இதில் ஃபிங்கர்பிரின்ட் சென்சார் கிடையாது. அதற்குப் பதிலாக பேஸ் அன்லாக் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் விலை 6,999 ரூபாய்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி